ஆப்கானிஸ்தான்: 90,000 கேமராக்கள் மூலம் காபூல் மக்களை கண்காணிக்கும் தாலிபன்கள் – எதற்காக?

Share

ஆப்கானிஸ்தான், தாலிபன் அரசு, கண்காணிப்பு கேமராக்கள், சீனா
படக்குறிப்பு, காபூல் மக்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஆயிரக்கணக்கான கேமராக்கள் இப்போது பயன்படுத்தப்படுகின்றன

  • எழுதியவர், மஹ்ஜூபா நவ்ரூசி
  • பதவி, பிபிசி ஆப்கன் சேவை

பத்துக்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் திரைகளால் சூழப்பட்ட, அதிக நபர்கள் கொண்ட சிறிய கட்டுப்பாட்டு மையம் அது. அங்கு தாலிபனின் காவல்துறை, 90,000 சிசிடிவி கேமராக்கள் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு புதிய அமைப்பைப் பெருமையுடன் பிபிசியிடம் காட்டியது. லட்சக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையைக் கண்காணிக்க இந்த அமைப்பு பயன்படுத்தப்படும்.

“நாங்கள் இங்கிருந்து முழு காபூல் நகரத்தையும் கண்காணிக்கிறோம்,” என்று தாலிபன் காவல்துறைத் தலைவரின் செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரான், திரைகளில் ஒன்றைச் சுட்டிக்காட்டி கூறுகிறார்.

இத்தகைய கண்காணிப்பு, குற்றங்களை எதிர்த்துப் போராட உதவும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் ஷரியா சட்டம் குறித்த இஸ்லாமிய தாலிபன் அரசாங்கத்தின் புரிதலின் கீழ் அமல்படுத்தப்படும் கடுமையான ஒழுக்கக் குறியீட்டைக் கண்காணிக்கவும், கருத்து வேறுபாடுகளைக் கட்டுப்படுத்தவும் இது பயன்படுத்தப்படும் என்று விமர்சகர்கள் அஞ்சுகின்றனர்.

இந்த அமைப்பின் செயல்பாட்டைப் பார்க்க அனுமதிக்கப்பட்ட முதல் சர்வதேச ஊடகம் பிபிசிதான்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com