அவர் கூறியது போலவே அறிவிப்பும் வந்தது. நானும் தொடர்ந்து விளையாடினேன். நான் மட்டும் அப்போதே ஓய்வுபெற்றிருந்தால், 9,200 முதல் 9,300 ரன்களில் கரியரை முடித்திருப்பேன். பாகிஸ்தான் இந்தியா வந்ததாலும், அதற்கிடையில் இந்தியாவில் இரண்டு தொடர்கள் நடந்ததாலும் நான் 10,000 ரன்களைத் தொட்டேன்.” என்று கூறினேன்.
1987-ல் பாகிஸ்தான், இந்தியா வந்து விளையாடிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முடிவில் ஓய்வுபெற்ற கவாஸ்கர், அந்தத் தொடரின் நான்காவது போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களைத் தொட்டார். கடைசி போட்டியோடு, 10,122 டெஸ்ட் ரன்களுடன் தனது டெஸ்ட் கரியரை கவாஸ்கர் முடித்துக்கொண்டார். மேலும், அந்த டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் கேப்டன் இம்ரான் கான்தான் தொடர் நாயகன் விருது வென்றார்.

பின்னாளில், கவாஸ்கரின் இந்தச் சாதனையை 2005-ல் மற்றொரு இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் முறியடித்தார். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 15,921 ரன்களுடன் சச்சின் டெண்டுல்கர்தான் இன்றும் முதலிடத்தில் இருக்கிறார்.