Dhoni: "தோனியை நான் முந்தியது மகிழ்ச்சிதான்; ஆனால்…" – சாதனை படைத்த தினேஷ் கார்த்திக்

Share

தோனியைப் போல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக பிரபலமான தினேஷ் கார்த்திக், சர்வதேச கிரிக்கெட்டில் மட்டும் இந்திய அணிக்காக 94 ஒருநாள், 60 டி20, 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். கடந்த ஆண்டு ஐ.பி.எல்லில் இருந்து ஓய்வுபெற்ற தினேஷ் கார்த்திக் தற்போது, தான் விளையாடிய ஆர்.சி.பி அணியின் பேட்டிங் பயிற்சியாளராகப் பொறுப்பு வகிக்கிறார். மறுபக்கம், தற்போது நடந்து முடிந்த தென்னாப்பிரிக்கா டி20 லீக் கிரிக்கெட்டில் (SA20) பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார்.

தினேஷ் கார்த்திக்

இதில், காலிறுதிவரை முன்னேறிய பார்ல் ராயல்ஸ் அணியில் 11 போட்டிகளில் விளையாடி 130 ரன்கள் அடித்து, தற்போது டி20 கிரிக்கெட்டில் தோனியை முந்தியிருக்கிறார். அதாவது, அனைத்து வகையிலான டி20 போட்டிகளையும் சேர்த்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மொத்தம் 7,537 ரன்கள் அடித்து, தோனியை விட 105 ரன்கள் முன்னிலையில் இருக்கிறார். இந்த நிலையில்தான், தோனியை முந்தியிருப்பது மகிழ்ச்சிதான் என்றும், ஆனால் விரைவில் அதை அவர் முறியடுத்துவிடுவார் என்றும் தினேஷ் கார்த்திக் தெரிவித்திருக்கிறார்.

நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் இதுபற்றி பேசிய தினேஷ் கார்த்திக், “இந்தியாவுக்காக நிறைய விளையாடியிருக்கிறேன். நாட்டுக்காக விளையாட முயல்வதும், சிறப்பாகச் செயல்படுவதும் முக்கியமானதாக நினைக்கிறேன். நான் ஒருபோதும் சாதனைகளால் ஈர்க்கப்பட்ட ஒருவராக இருந்ததில்லை. ஒருவேளை சிறந்த சாதனைகள் இல்லை போல… எனக்குத் தெரியவில்லை.

தோனி

இருப்பினும், தற்போது தோனியை நான் முந்தியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், அவர் என்னை முந்திச் செல்வதற்கு நீண்ட காலம் ஆகாது. எனக்கு அது தொந்தரவாகவும் இருக்காது. ஒரு விக்கெட் கீப்பராக அதிக ரன்கள் எடுத்த வீரராக அந்த சாதனையை அவர் தக்கவைத்துக்கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

மார்ச் 22-ம் தேதி தொடங்கும் ஐ.பி.எல்லின் 18-வது சீசனில் தோனி விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com