36-வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்த ஸ்டீவ் ஸ்மித் – SL vs AUS | australia captain steve smith scores his 36th test century versus sri lanka

Share

காலே: இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது 36-வது டெஸ்ட் கிரிக்கெட் சதத்தை பதிவு செய்தார் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய வீரர்களில் 5-வது இடத்துக்கு முன்னேற்றியுள்ளார்.

இலங்கை – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே நகரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் 28 ரன்கள் சேர்த்து கடைசி விக்கெட்டையும் இழந்தது.

இதன் பின்னர் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. அந்த அணி 100 ரன்களை சேர்ப்பதற்குள் டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஷேன் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோரது விக்கெட்டை இழந்தது. இருப்பினும் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் விக்கெட் அலெக்ஸ் கேரி இணைந்து 239 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் சதம் கடந்து அவுட் ஆகாமல் இரண்டாவது நாள் ஆட்டத்தை நிறைவு செய்தனர். ஸ்மித் 120 ரன்கள் மற்றும் 139 ரன்கள் எடுத்துள்ளனர். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 330 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா. இதன் மூலம் ஆட்டத்தில் 73 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ஸ்மித் சாதனை சதம்: ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் இந்தப் போட்டியில் தனது 36-வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். இது ஆசிய மண்ணில் அவரது 7 சதம். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகம் சதம் விளாசிய வீரர்களில் 5-வது இடத்தை அவர் எட்டியுள்ளார். இதே இடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் இந்தியாவின் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் ஆகியோர் உள்ளனர்.

இந்தப் பட்டியலில் டாப் 4 இடங்களில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் – 51 சதம், தென் ஆப்பிரிக்காவின் ஜாக் கலிஸ் – 45 சதம், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் – 41 சதம், இலங்கையின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்கரா – 38 சதம் பதிவு செய்துள்ளனர்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com