மனித மூளையின் மோசமான நினைவுகளை அழிக்க முடியுமா? எலிகளை வைத்து நடத்தப்பட்ட சோதனை கூறுவது என்ன?

Share

எலிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எலிகள் இந்த வகையான பரிசோதனைக்கு ஏற்றவை, ஏனென்றால் சில நேரங்களில் அவை தூங்கும்போது, அவற்றின் கண்கள் ஓரளவு திறந்திருக்கும்

மனித நினைவு (Memory) என்றால் என்ன, அதன் முழு திறன் எவ்வளவு இருக்கும்? நாம் எதையாவது ஒன்றை மறக்கிறோம் என்றால், அதற்கு காரணம் ஒரு புதிய நினைவு ஏற்கனவே இருக்கும் ஒன்றுக்கு மாற்றாக செயல்படுகிறது என்பதாலா?

அமெரிக்க தொலைக்காட்சி தொடரான ‘தி சிம்ப்சன்ஸ்’-இன், அனிமேஷன் நகைச்சுவை கதாபாத்திரம் ஹோமர் சிம்ப்சன், மனித நினைவு அப்படிதான் செயல்படுகிறது என நம்பினார்.

“ஒவ்வொரு முறையும் நான் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளும்போது, அது என் மூளையிலிருந்து சில பழைய விஷயங்களை வெளியே தள்ளுகிறது” என்று ஹோமர் கதாபாத்திரம் தனது மனைவி மார்ஜிடம் ஒரு அத்தியாயத்தில் கூறும்.

ஆனால் ஹோமரின் உள்ளுணர்வு, நாம் நினைப்பது போல் யதார்த்தத்திலிருந்து வெகு தொலைவில் இல்லை. பெரும் விளைவை ஏற்படுத்தக்கூடிய ஒரு மறத்தல் நிகழ்வு ஒன்று உள்ளது (Catastrophic forgetting). அதில் புதிய தகவல்களை ஒருங்கிணைக்கும் செயல்முறை, ஏற்கனவே உள்ள நினைவுகளை பாதிக்கிறது அல்லது அழிக்கிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com