`இந்தத் தலைமுறையின் சிறந்த வீரர் கோலி இல்லையா…’ – ரிக்கி பாண்டிங்கின் வாதம் என்ன? | ricky ponting supports steve smith for this generation best player

Share

இந்த நிலையில் ரிக்கி பாண்டிங், “ஸ்டீவ் ஸ்மித் தனது தலைமுறையின் சிறந்த வீரரா என்ற கேள்வியில், அவருக்கு எதிராக வாதிடுவது கடினம். ஒருபக்கம் ஜோ ரூட் இருக்கிறார். கேன் வில்லியம்சனின் ரெக்கார்டும் சிறப்பாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் ஜோ ரூட் தன்னை மெருகேற்றியிருக்கிறார். 5 – 6 ஆண்டுகளுக்கு முன்பு கோலி உட்பட நான்கு பேர் பெரிய வீரர்களாக உருவெடுத்தனர். இவர்களில், மற்றவர்கள் அளவுக்கு சதமடிக்காததால் ஜோ ரூட் நான்காவது இடத்தில் இருந்தார்.

ரிக்கி பாண்டிங்

ரிக்கி பாண்டிங்

ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் ஜோ ரூட் 19 சதங்களை அடித்துள்ளார். எனவே, சிறந்த வீரர் யார் என்று ஆங்கிலேயரிடம் கேட்டால் ஜோ ரூட் என்றும், ஆஸ்திரேலியர்களிடம் கேட்டால் ஸ்டீவ் ஸ்மித் என்றும், நியூசிலாந்தினரிடம் கேட்டால் கேன் வில்லியம்சன் என்றும் கூறுவார்கள். இது சற்று கடினமானது. ஆனாலும், ரெக்கார்ட் அடிப்படையில் ஸ்டீவ் ஸ்மித் செய்ததைப் பார்க்கையில் அவருக்கெதிராக வாதிடுவது கடினம்.” என்று கூறியிருக்கிறார்.

இந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேன், இந்தியாவின் விராட் கோலியா, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தா, இங்கிலாந்தின் ஜோ ரூட்டா அல்லது நியூசிலாந்தின் கேன் வில்லியம்சனா யார் என்பது பற்றிய உங்களின் கருத்துகளை கமென்ட்டில் பதிவிடவும்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com