இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கோலி குறித்து சுரேஷ் ரெய்னா சில விஷயங்களைப் பேசியிருக்கிறார். கோலி குறித்துப் பேசிய அவர், “அவருடைய மனநிலை மிகவும் வித்தியாசமானது. அவர் டிரெஸ்ஸிங் ரூமில் நல்ல ஒரு சக வீரராக இருக்கக்கூடியவர். பயிற்சி எடுக்கும்போது வித்தியாசமாகத் தயாராகும் அவர் ஃபீல்டிங் செய்யும் போது முதல் ஆளாக வந்து வெற்றிக்காக நாம் போராடுவோம்.

அதற்காக ஃபீல்டிங் செய்வோம் என்று சொல்லக்கூடியவர். அவருடன் சேர்ந்து நானும் மகிழ்ச்சியாக ஃபீல்டிங் செய்திருக்கிறேன். ஏனெனில் களத்தில் வித்தியாசமாகச் செய்யக்கூடிய அவர் டைவிங் செய்வதற்கு ஆர்வத்துடன் இருப்பார். அது மற்ற அனைத்து வீரர்களின் அணுகுமுறையை மாற்றும்.