ரூ.1 கோடி இன்ஸூரன்ஸ் தொகை; பணத்துக்காக தங்கையைக் கொன்று நாடகமாடிய தொழிலதிபர் – சிக்கியதெப்படி?

Share

ஆந்திரா மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர், அவரின் சகோதரியை கொலை செய்ததற்காக கைது செய்யபட்டுள்ளார்.

ரியல் எஸ்டேட் செய்துவரும் 30 வயது இளைஞர் மலப்பட்டி அஷோக் குமார். இவரது விவராகத்தான, குழந்தை இல்லாத தங்கை கடந்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி கொலை செய்யப்பட்டுள்ளார்.

அஷோக் குமார் பெரும் கடனில் சிக்கியிருந்த நிலையில், அவரது தங்கை மீது ரூபாய் ஒரு கோடி மதிப்புக்கு பல நிறுவனங்களில் இன்ஸூரன்ஸ் முதலீடு செய்து, பின்னர் அவரைக் கொலை செய்து, கொலையை சாலை விபத்து போல சித்திரித்து இன்ஸூரன்ஸ் பணத்தைப் பெற்றுள்ளார்.

விபத்து நடந்த அன்று அஷோக் குமார், அவரது தங்கையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக காரில் ஓங்கோல் அழைத்துச் சென்றுள்ளார்.

வரும் வழியில் அவருக்கு தூக்க மாத்திரைக் கொடுத்து கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த வழக்கில் இந்திய தண்டனைச் சட்டம் 120 (B)(சதி), 302 (கொலை) மற்றும் 201 (தடயங்களை மறைத்தல்) எனப் பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.

அஷோக் குமார் முன்னதாகவே அவரது தங்கையை கொலை செய்ய முயற்சித்திருக்கிறாரா, இந்த சதியில் அவருக்கு கூட்டாளிகள் உள்ளனரா என்பதை அறிய மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com