IND vs ENG 3வது டி20: வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தியும் இந்தியா தோல்வி – என்ன நடந்தது?

Share

இந்தியா - இங்கிலாந்து, வருண் சக்ரவர்த்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தியும் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியை தவறவிட்டது.

  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தியும், ராஜ்கோட்டில் நேற்று நடந்த 3வது டி20 போட்டியில் இந்திய அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது. 172 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் சேர்த்து 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர்.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி ஒரு ஆட்டத்திலும் வென்று 2-1 என்ற கணக்கில் தொடரை உயிர்ப்புடன் வைத்துள்ளது இங்கிலாந்து அணி.

ராஜ்கோட் மைதானத்தில் கடைசியாக 2017ம் ஆண்டு டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது. அதன்பின் 8 ஆண்டுகளுக்குப்பின் இப்போது தோற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்திய மண்ணில் தொடர்ந்து 10 டி20 போட்டிகளாக வெற்றி நடை போட்டுவந்த இந்திய அணி, 446 நாட்களுக்குப் பின் தோல்வி அடைந்துள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com