சீமான் பிரபாகரனை சந்தித்ததும், ஆயுதப் பயிற்சி பெற்றதும் உண்மையா?

Share

சீமான் - பிரபாகரன் சந்திப்பு உண்மையா?

பட மூலாதாரம், TWITTER

படக்குறிப்பு, சீமான், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்

  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை சந்தித்தாரா, புகைப்படம் எடுக்கப்பட்டதா என்பது குறித்த விவாதங்கள் தமிழக அரசியல் களத்தை ஆக்கிரமித்திருக்கின்றன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்கள்?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த சில நாட்களாக பெரியார் மீது தொடர் விமர்சனங்களை நடத்தி வருகிறார். இந்த நிலையில், பல வருடங்களுக்கு முன்பாக அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தது தொடர்பான விவாதங்களும் எழ ஆரம்பித்திருக்கின்றன.

கடந்த ஜனவரி 19ஆம் தேதியன்று திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் என்பவர், தன்னுடைய X பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்தப் பதிவில், “இவர், அவரை சந்திக்கவே இல்லை. எதன் அடிப்படையில் சொல்கிறேன் என்றால்.. அந்த புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தவன் என்கிற அடிப்படையில்” என்று குறிப்பிட்டிருந்தார்.

பின்னர் ஊடகங்களுக்கும் இது தொடர்பாக பேட்டியளித்தார் ராஜ்குமார். அந்தப் பேட்டிகளில் சீமானுக்கு பரிசளிப்பதற்காக இதுபோன்ற ஒரு படத்தை உருவாக்கித் தரும்படி ஒருவர் கேட்டதாகவும் அதற்காகவே அப்படி ஒரு படம் உருவாக்கப்பட்டதாகவும், உண்மையில் அப்படி ஒரு படம் எடுக்கப்படவே இல்லையன்றும் அவர் தெரிவித்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com