முதல் போட்டி மதுரையிலும், இரண்டாவது போட்டி தஞ்சாவூரிலும், மூன்றாவது போட்டி திருச்சியிலும், நான்காவது போட்டி ராமநாதபுரத்திலும், ஐந்தாவது போட்டி காரைக்குடியிலும் நடைபெற்ற நிலையில் ஆறாவது போட்டி விழுப்புரம் ஆறுமுகம் மீனாட்சி திருமண நிலையத்தில் இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் விழுப்புரம் மட்டுமின்றி கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். குறிப்பாக விழுப்புரத்தைச் சுற்றியுள்ள அரசூர், இளவனாசூர் கோட்டை, திருக்கோவிலூர், வளவனூர், கோலியனூர், விக்கிரவாண்டி, கூட்டேரிப்பட்டு, உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

முதல் சுற்று தேர்வுக்காக கேரட் டிலைட், ஃபிஷ் 65, பேபி பொட்டேட்டோ கிரேவி, கொள்ளு துவையல், பலா பிஞ்சு பிரியாணி, தேங்காய்பால் சாதம், நெத்திலி கருவாடு தொக்கு, வெற்றிலை பாயாசம், தூதுவளை சூப்பு, முடக்கத்தான் தோசை, பிரண்டைத் துவையல், கற்பூரவள்ளி சூப், ஃபிஷ் ரோல், கேரட் பீட்ரூட் ஜெல்லி, பூசணிக்காய் வடிவ கேரட் ஸ்வீட், பிரட் சாசேஜ் கபாப், கத்தரிக்காய் முட்டை வடை, கடாய் கொத்துக்கறி, வாழைத்தண்டு பச்சடி, ரஸ்க் அல்வா, சோளம் கொழுக்கட்டை, சோளம் வடை, கத்தரிக்காய் பிரியாணி, சம்பா ரவை அல்வா, தவளை அடை, புளி இஞ்சி தொக்கு, சாக்லேட் லாவா கேக், மில்க் கேக், நவதானிய கோலா உருண்டை, சென்னாகுன்னி கருவாட்டு கத்திரிக்காய் தொக்கு, கோதுமை ரவா கேசரி, தினை கேசரி, நெய் சாதம், பெருஞ்சீரக சாதம் போன்றவற்றை செய்து அசத்தியிருந்தனர்.