பும்ரா காயமடைந்து ஓய்வில் இருக்கிறார். அவர் பிப்ரவரி முதல் வாரத்திற்குள் குணமாகிவிடுகிறார் என நம்புகிறோம். அதனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஹர்ஷித் ராணாவையும் இணைத்திருக்கிறோம் என்றார் அகர்கர்.
அவரிடம் கருண் நாயர் பற்றிய கேள்வியை முன் வைக்கையில், “750+ ஆவரேஜில் ஆடுவது அசாத்தியமானது. ஆனால், எங்களால் 15 பேரைத்தான் அணியில் எடுக்க முடியும். எல்லாரையும் எடுக்க முடியாது.’ எனக் கூறினார்.
நடப்பு விஜய் ஹசாரே தொடரில் கருண் நாயர் 5 சதங்களுடன் 752 ரன்களை அடித்திருக்கிறார். 6 இன்னிங்ஸ்களில் நாட் அவுட்டாக இருந்திருக்கிறார். ஆவரேஜ் 752. ஆனாலும் அவரை அணியில் எடுக்கவில்லை.