ராமநாதபுரம்: ‘பலாக்காய் சுக்கா, கசகசா அல்வா..’ – தொடங்கிய அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீஸன் 2! | Aval Vikatan Cooking Superstar Season 2 started at Ramanathapuram

Share

உடலுக்கு வலு சேர்க்கும் மண் மனம் மாறாத உணவு வகைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் வகையில் அவள் விகடன் மாநிலம் முழுவதும் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியினை நடத்தி வருகிறது.

இந்த போட்டியின் 2-ம் சீசன் தற்போது நடந்து வருகிறது. மதுரை, திருச்சி, தஞ்சாவூரைத் தொடர்ந்து ராமநாதபுரத்தில் இன்று (ஜனவரி 18) சமையல் சூப்பர் ஸ்டார் சீஸன் -2 மகளிரின் சமையல் வாசத்துடன் தொடங்கியது.

அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியாளர்

அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியாளர்
உ.பாண்டி

ராமநாதபுரம் தாஜ் மஹாலில் இந்த போட்டியினை செஃப் தீனா, விகடன் குழும ஏ.ஜி.எம் சதீஷ்குமார், லலிதா ஜூவல்லர்ஸ் நிர்வாகி வைரவ மூர்த்தி, தூத்துக்குடி விகடன் வாசகி வனஜா, பாம்பன் ஹரீமா ஆகியோர் குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியின் துவக்கமாக உரையாற்றிய செஃப் தீனா, பசிக்காக எடுத்துக்கொள்ளப்படும் உணவுகளில் எந்த உணவை எந்த நேரத்தில் எவ்வளவு அளவு எடுத்துக்கொண்டால் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியமிருக்காது என்பது குறித்தும், நம் உடலுக்கு வலு சேர்க்கும் உணவு வகைகள் குறித்தும் போட்டி பங்கேற்பாளர்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.

குத்துவிளக்கேற்றிய செஃப் தீனா

குத்துவிளக்கேற்றிய செஃப் தீனா
உ.பாண்டி

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்
உ.பாண்டி

இந்த போட்டியில் பங்கேற்பதற்காக ராமநாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரை, மண்டபம், பரமக்குடி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்திருந்த போட்டியாளர்கள் செய்து கொண்டு வந்திருந்த பருத்தி பால் கஞ்சி, சிவப்பு பச்சரிசி இடியாப்பம், மாசி கருவாடு சம்பல், வெள்ளை எள்ளு லட்டு, மஹராஷ்டிரா குரன் போலி, கேழ்வரகு கழி, பலாக்காய் சுக்கா, கசகசா அல்வா என ஏராளமான உணவு வகைகளை ருசிப்பதற்காகக் காட்சிப்படுத்தியிருந்தனர்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com