இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ சில விதிகளைக் கொண்டுவரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
புதிய விதிகளின்படி, அணி வீரர்களின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் வெளிநாட்டுப் போட்டிகளின்போது, வீரர்களுடன் தங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
45 நாட்கள் நீளும் ஒரு வெளிநாட்டுப் பயணத்தில், இரண்டு வாரங்கள் மட்டுமே தங்கள் மனைவியுடன் வீரர்கள் தங்க அனுமதிக்கப்படும் வகையில் விதிகள் முன்மொழியப்பட்டுள்ளன.
இந்தியா – ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் பி.சி.சி.ஐ உன்னிப்பாகக் கவனித்த விஷயங்களின் அடிப்படையிலேயே இந்த விதிகள் வகுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.