Jayam Ravi: ‘இனிமேல் யாரும் என்னை ஜெயம் ரவி என்று அழைக்க வேண்டாம்’ – வெளியான திடீர் அறிக்கை | actor jayam ravi release a report

Share

திரைத்துறை மீது நான் கொண்டுள்ள அளவற்ற அன்பின் பாத்திரமாக ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கியுள்ளேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்நிறுவனம் உலகளவில் ரசிகர்கள் கொண்டாடும் சினிமாவைத் திரைக்கு கொண்டு சேர்க்கும் நோக்கம் கொண்டு துவங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் திறமையாளர்களுக்கும், நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு அர்த்தமுள்ள கதைகளைத் திரைக்கு கொண்டுவர உதவும்.

என் அன்பான ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி சிறப்பான சமுதாயத்தை உருவாக்க ரசிகர்கள் எனக்கு பலமாகவும், ஊக்கமளித்தும் வருகிறார்கள். எனக்கு ஆதரவளித்த சமூகத்திற்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய என் ரசிகர் மன்றத்தை பிறருக்கு உதவும் வகையில் ரவி மோகன் ரசிகர்கள் அறக்கட்டளையாக மாற்றப்படுகிறது. இது நான் பெற்ற அன்பையும், ஆதரவையும் மிகவும் தேவைப்படுபவர்களுக்கு அர்த்தமுள்ளப் பங்களிப்பாக மாற்றும் எனது இதயப்பூர்வமான முயற்சி.

ஜெயம் ரவி

ஜெயம் ரவி

தமிழ் மக்கள் ஆசியுடன் எனது ரசிகர்கள் ஊடகத்தினர் மற்றும் அனைவரையும் மேலே குறிப்பிட்டுள்ளதை போன்றே என்னை அழைக்குமாறும் புதிய துவக்கத்திற்கு தங்களது ஆதரவை வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். உங்களது ஊக்கம்தான், எனக்கு எப்போதும் சிறப்பான உந்துதலாக இருந்து வந்துள்ளது. புதிய பயணத்திலும் உங்களின் தொடர்ச்சியான ஆதரவு எனக்கு கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன். அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள். நேர்மறை மற்றும் முன்னேற்றம் நிரம்பிய ஆண்டாக இதனை மாற்றுவோம்.” என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com