வானியல் அதிசயம்: 2025ஆம் ஆண்டின் சிறந்த எரிகல் பொழிவை எங்கு, எப்போது பார்க்கலாம்?

Share

குவாட்ரான்டிட்ஸ்: இந்தாண்டின் சிறந்த எரிகல் பொழிவை எப்போது பார்க்கலாம்? வெறும் கண்ணால் பார்க்கலாமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நாசாவின் கூற்றுப்படி, சிறந்த சூழலில் ஒரு மணி நேரத்திற்கு 120 “பிரகாசமான ஃபயர்பால் எரிகற்கள்” வரை காண முடியும்

எரிகல் விழும்போது பார்க்க நேர்ந்தால், அந்த சமயத்தில் நாம் எதை நினைக்கிறோமோ அது நிறைவேறும் என்பது பழங்கால நம்பிக்கை. இந்த மூடநம்பிக்கையை நீங்கள் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி, வானியல் நிகழ்வுகளைப் பார்ப்பது ஒரு அதிர்ஷ்டம்தான்.

குவாட்ரான்டிட்ஸ் (Quadrantids) என்னும் 2025 ஆம் ஆண்டின் முதல் ‘எரிகல் பொழிவு’ (meteor shower), ஜனவரி 3-4 தேதிகளில் உச்சத்தை எட்டும். இதனை வெறும் கண்களால் பார்க்க முடியும். டிசம்பர் 28 அன்று தொடங்கிய இந்த எரிகல் பொழிவு, ஜனவரி 12 வரை தொடரும்.

சர்வதேச எரிகற்கள் அமைப்பின் (IMO) கூற்றுப்படி, இந்த எரிகல் பொழிவு “இந்தாண்டின் சிறந்த நிகழ்வாக” இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

“இந்த வானியல் நிகழ்வின் உச்சத்தின்போது சரியான சூழல் அமைந்தால், ஒரு மணிநேரத்திற்கு 120 பிரகாசமான தீப்பந்து போன்ற எரிகற்கள் வரை நாம் காண முடியும், இந்த துகள்கள் பூமியின் வளிமண்டலத்தில் விநாடிக்கு 40 கி.மீ. வேகத்தில் நுழைகின்றன” என்று அமெரிக்க விண்வெளி முகமையான நாசா தெரிவித்துள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com