RCB: “பெங்களூரு அணியை வழிநடத்த தயாராக இருக்கிறேன்!” – கேப்டன்சிக்கு விருப்பம் தெரிவித்த படிதார் | Rajat Patidar says he ready to lead RCB in upcoming ipl season

Share

சையது முஷ்டாக் அலி டிராபி 2024 டி20 தொடர் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று மாலை இறுதிப் போட்டி நடைபெறவிருக்கிறது. இதில், அஜின்க்யா ரகானேவின் அதிரடி ஆட்டங்களால் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. மறுபக்கம், ஆர்.சி.பி அணியில் ரூ. 11 கோடிக்கு தக்கவைக்கப்பட்ட ரஜத் படிதார் தலைமையிலான மத்தியப்பிரதேச அணி இறுதிப் போட்டிக்குச் சென்றிருக்கிறது.

ரஜத் படிதார்

ரஜத் படிதார்

அதுவும், இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்களில் 347 ரன்களுடன் மூன்றாம் இடத்தில் இருக்கும் படிதார், டெல்லிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் அதிரடியாக 29 பந்துகளில் 66 ரன்கள் அடித்து, தனது அணியை 13 வருடங்களுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்குக் கொண்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில், அடுத்தாண்டு ஐ.பி.எல் தொடரில் ஆர்.சி.பி அணியை வழிநடத்துவது குறித்து படிதார் தனது விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com