மோதி – ராகுல் காந்தி: சாவர்க்கர், ஏகலைவன் பற்றிய ராகுல் பேச்சும் மோதி பதிலடியும் என்ன?

Share

மோதி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு குறித்த விவாதத்தின் போது, பிரதமர் மோதி காங்கிரஸ் மற்றும் காந்தி குடும்பத்தை தாக்கினார்.

சனிக்கிழமை, அரசியல் சாசனம் ஏற்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடந்த விவாதத்தில், பிரதமர் மோதி, காங்கிரசை கடுமையாக விமர்சித்தார்.

காந்தி குடும்பத்தை குறிவைத்து, “காங்கிரசின் ஒரு குடும்பம் அரசியலமைப்பிற்கு தீங்கு விளைவிக்கிறது. 75 ஆண்டுகளில் அந்த ஒரு குடும்பம் 55 ஆண்டுகள் ஆட்சி செய்தது. அந்த கால கட்டத்தில் நாட்டில் என்ன நடந்தது என்பதை அறிய அனைவருக்கும் உரிமை உள்ளது” என்றார் மோதி.

முன்னதாக, மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை அரசியல் சாசனத்தைப் பற்றி பேசுகையில், சாவர்க்கரின் கட்டுரையை மேற்கோள் காட்டி மோதி அரசாங்கத்தை விமர்சித்தார்.

சாதிவாரி கணக்கெடுப்பு, இடஒதுக்கீடு அதிகரிப்பு போன்ற பிரச்னைகளை எழுப்பி மோதி அரசை குறிவைத்து பேசினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com