are eggs good for heart health

Share

முட்டை கொழுப்புச்சத்திற்கான வளவமான ஆதரத்தை கொண்டது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் முட்டையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. முட்டை உட்கொள்வது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறதா அல்லது தீங்கு விளைவிப்பதா என்பதற்கு முரண்பட்ட சான்றுகள் உள்ளன.

ஹார்ட் இதழில் வெளியிடப்பட்ட 2018 ஆம் ஆண்டு ஆய்வில், சீனாவை சேர்ந்த அரை மில்லியனுக்கும் அதிகமான பெரியவர்கள் தினந்தோறும் சுமார் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் கணிசமாகக் குறையும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மிதமான அளவில் முட்டை உட்கொள்வது இரத்தத்தில் இதய-ஆரோக்கியமான வளர்சிதை மாற்றங்களின் அளவை எவ்வாறு அதிகரிக்கும் என்று ஆய்வு கண்டறிந்துள்ளது.

ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

முட்டை நுகர்வு இரத்தத்தில் உள்ள இதய ஆரோக்கியத்தின் குறிப்பான்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆராய்வதற்காக மக்கள்தொகை அடிப்படையிலான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. முட்டை நுகர்வு மற்றும் இருதய ஆபத்து ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகளில் பிளாஸ்மா கொலஸ்ட்ரால் வளர்சிதை மாற்றம் முக்கிய பங்கு வகிப்பதை பங்கை சில ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. எனவே இந்த இடைவெளியை நிவர்த்தி செய்ய உதவுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் முட்டை 20 காசுகள் உயர்த்தி 4 ரூ. 20 காசுகளுக்கு கொள்முதல்

ஆராய்ச்சி முடிவுகள் சொல்வது என்ன?

சீனா கடூரி பயோபேங்கில் இருந்து 4,778 பங்கேற்பாளர்களை Pan மற்றும் குழு தேர்ந்தெடுத்தது, அவர்களில் 3,401 பேருக்கு இருதய நோய் மற்றும் 1,377 பேர் இருதய நோய் இல்லாதவர்கள். பங்கேற்பாளர்களின் இரத்தத்தில் இருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்மா மாதிரிகளில் 225 வளர்சிதை மாற்றங்களை அளவிட இலக்கு வைக்கப்பட்ட அணு காந்த அதிர்வு என்ற நுட்பத்தைப் பயன்படுத்தினர். இந்த வளர்சிதை மாற்றங்களில், முட்டை நுகர்வு சுய-அறிக்கை அளவுகளுடன் தொடர்புடைய 24 என்ற எண்ணை ஆய்வாளர்களுக்கு அளித்துள்ளது.

தயிரை இப்படி சாப்பிட்டால் வெயில் காலத்தில் மாரடைப்பு பிரச்சனையை தவிர்க்கலாம்..!

கண்டுபிடிப்புகளின் முடிவு இதோ:

மிதமான அளவு முட்டைகளை உண்ணும் நபர்களின் இரத்தத்தில் அபோலிபோபுரோட்டீன் A1 என்ற புரதத்தின் அளவு அதிகமாக இருப்பதாக பகுப்பாய்வு முடிவுகள் காட்டுகின்றன. இது ‘நல்ல லிப்போபுரோட்டீன்’ என்றும் அறியப்படும் உயர் அடர்த்தி கொழுப்புப்புரதத்தின் (HDL) கட்டுமானத் தொகுதி ஆகும். இதனைக் கொண்டுள்ள நபர்களின் ரத்தத்தில் அதிக பெரிய HDL மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது. இது இரத்த நாளங்களில் இருந்து கொழுப்பை அகற்ற உதவுகிறது மற்றும் அதன் மூலம் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும் அடைப்புகளிலிருந்து பாதுகாக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதய நோயுடன் தொடர்புடைய 14 வளர்சிதை மாற்றங்களை ஆராய்ச்சியாளர்கள் மேலும் அடையாளம் கண்டுள்ளனர். குறைவான முட்டைகளை உண்ணும் பங்கேற்பாளர்களின் இரத்தத்தில் குறைந்த அளவிலான நன்மை பயக்கும் வளர்சிதை மாற்றங்கள் மற்றும் அதிக அளவு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

வயது ஏறினாலும் மூளையை எப்போதும் இளமையாக வைத்துக்கொள்ள இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்கள்..!

மேலும் தெரிந்து கொள்ள வேண்டியவை:

இந்த ஆய்வு மிதமான அளவு முட்டைகளை சாப்பிடுவது எப்படி இதய நோயிலிருந்து பாதுகாக்க உதவும் என்பதற்கான சாத்தியமான விளக்கத்தை அளிக்கிறது என்று இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் “இதை சரிபார்க்க கூடுதல் ஆய்வுகள் தேவை. முட்டை நுகர்வு மற்றும் இருதய நோய் அபாயம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பில் லிப்பிட் மெட்டாபொலிட்டுகள் வகிக்கும் பங்கு குறித்து கூடுதல் ஆய்வு தேவை” என தெரிவித்துள்ளனர்.

இறுதி முடிவு என்ன?

இந்த ஆய்வு சீன தேசிய உணவு வழிகாட்டுதல்களுக்கும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று பீக்கிங் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் மற்றும் உயிரியல் புள்ளியியல் துறையின் புகழ்பெற்ற பேராசிரியர் போயா மூத்த எழுத்தாளர் லிமிங் லி தெரிவித்துள்ளார். சீனாவின் தற்போதைய சுகாதார வழிகாட்டுதல்கள் ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிட பரிந்துரைக்கின்றன, ஆனால் சராசரி நுகர்வு இதை விட குறைவாக இருப்பதாக தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களிடையே மிதமான முட்டை நுகர்வை ஊக்குவிப்பதற்கும், இருதய நோய்க்கான ஒட்டுமொத்த ஆபத்தைக் குறைப்பதற்கும் கூடுதல் உத்திகளின் அவசியத்தை ஆய்வு முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன.

 

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com