Hasan Mahmud: `கோலி விக்கெட்டையே எடுப்பேன்; ஆனா, செலிப்ரேட் பண்ண மாட்டேன்!’- யார் இந்த ஹசன் மஹ்மூத்? | Who is Hasan Mahmud

Share

ஹசன் மஹ்மூத்ஹசன் மஹ்மூத்

ஹசன் மஹ்மூத்

ரோஹித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில், ரிஷப் பண்ட் என ஹஸன் வீழ்த்திய நான்கு விக்கெட்டுகளுமே இந்தியாவின் முக்கிய விக்கெட்டுகள். ஆனாலும், அந்த 24 வயது இளைஞர் சீறிப்பாய்ந்து ஆக்ரோஷமான கொண்டாட்டத்திலெல்லாம் ஈடுபடவில்லை. எந்த அலட்டலும் இல்லை. இயல்பு மாறாமல் அப்படியேதான் இருக்கிறார்.

போட்டி முடிந்து பத்திரிகையாளர் சந்திப்புக்கும் வந்திருந்தார். அங்கேயும் கேள்விகளுக்கு நிதானமாக ரொம்பவே பக்குவமாகவே பதில் கூறியிருந்தார். அவர் வீழ்த்திய விக்கெட்டுகளின் பொருட்டு அவருக்கு எந்த பிரமிப்பும் இல்லை. “வழக்கமாக நான் எதையெல்லாம் சரியாகச் செய்ய நினைப்பேனோ அதையேதான் இந்தப் போட்டியிலும் செய்தேன். வித்தியாசமாக எதையும் செய்ய முயற்சிக்கவில்லை. ரொம்பவே எளிமையாக சரியாக வீச வேண்டும் என நினைத்தேன். அவ்வளவுதான்.’ எனக் கூறியிருந்தார். ஒரு வேகப்பந்து வீச்சாளரிடம் இவ்வளவு நிதானத்தை பார்க்க ஆச்சர்யமாக இருந்தது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com