பரிசல் சவாரி.. சூடான மீன் வறுவல்.. களைகட்டிய ஓகேனக்கல்

Share

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் விடுமுறை தினத்தை கொண்டாட குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்.

தருமபுரி மாவட்டம ஒகேனக்கல் சுற்றுலாதளம் தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள இயற்கை அழகை கண்டு ரசிக்கவும், நீர்வீழ்ச்சிகளில் குளித்து மகிழவும்  ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கோடைக்காலம் தொடங்கியதிலிருந்தே ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான கர்நாடக, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருகை புரிகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்ததையடுத்து கோடை வெப்பத்தை தணிக்கவும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குடும்பத்துடன் ஒகேனக்கல்லில் காலை முதலே குவிய தொடங்கியுள்ளனர். ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு வரும் தண்ணீரின் அளவு 5,000 கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை முதலே வரத்த அதிகரித்து தற்போது 6,000 கனஅடியாக அதிகரித்தால் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது.

ஆண்களும், பெண்களும் ஒகேனக்கலின் பிரசித்தி பெற்ற எண்ணெய் மசாஜ் செய்து இங்குள்ள மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.      மேலும் பரிசலில் சவாரி செய்து இயற்கை அழகை ரசித்தும், தொங்கும்பாலம் மீது இருந்து அருவியின் அழகை ரசித்து மகிழ்ந்ததோடு சூடான மீன் வருவலை ருசித்து மகிழ்ந்தனர். கோடை விடுமுறையை கொண்டாட ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் ஒகேனக்கல் சுற்றுலாதளம் களைக்கட்டியதோடு அங்குள்ள வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

செய்தியாளர்: ஆர்.சுகுமார் ( தருமபுரி)

Published by:Ramprasath H

First published:

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com