முதலில் சென்னை அணி எதற்காக அப்படி ஒரு பதிவை வெளியிட்டது என பார்ப்போம். ‘Super Fans Starter Pack’ என்ற பெயரில் முன்பு எப்போதோ ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்கள். அதில், சென்னை அணியின் ஜெர்சி, விசில் போன்று சிஎஸ்கே சார்ந்த விஷயங்களெல்லாம் இருக்கிறது. அதை குறிப்பிட்டுதான் இப்போது ‘Major Missing’ என குறிப்பிட்டிருக்கிறார்கள். அதற்கு கீழேயே அடுத்த பதிவில், ‘விசில், ஜெர்சி, மஞ்சள் கொடி, சேப்பாக்கத்தின் ஆராவாரம்’ சூப்பர் ரசிகர்களே நீங்களும் இந்தப் பட்டியலை தொடருங்கள் என பதிவிட்டிருக்கின்றனர்.
இந்தப் பதிவின் தொனிதான் ரசிகர்களை குழப்பியிருக்கிறது. மார்ச், ஏப்ரல், மே இதுதான் ஐ.பி.எல் சீசன். இப்போது சீசன் இல்லை என்பதால் இதையெல்லாம் தவறவிடுகிறோம் என்கிற தொனியில்தான் சென்னை அணி பதிவிட்டிருக்கிறது. ‘Major Missing’ என்கிற வார்த்தையை பிடித்துக் கொண்டு தோனிதான் ஓய்வு முடிவை எடுத்துவிட்டார் என ரசிகர்கள் குழம்பிவிட்டனர்.