பாஜகவில் இணைந்த பிரபல இஸ்லாமிய மதகுருவின் மருமகள் – முத்தலாக்கால் பாதிக்கப்பட்டவர்!!

Share

பிரபல இஸ்லாமிய மதகுருவான மவுலானா தௌகீர் அகமது ரசா கானின் மருமகளும், முத்தலாக்கால் பாதிக்கப்பட்டவருமான நீடா கான்,  உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜகவில் இணைந்துள்ளார்.

எதிர்வரும் உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல், தேசிய அளவில் முக்கியத்துவத்தை பிடித்திருக்கிறது. அங்கு மேற்கு உ.பியில் இஸ்லாமியர்கள் கணிசமான அளவில் வசித்து வருகின்றனர். அந்த வகையில் பரேல்வி பிரிவு இஸ்லாமியர்களின் மதகுருவான மவுலானா தௌகீர் அகமது ரசா கான், தனது ஆதரவை காங்கிரஸ் கட்சிக்கு அளிப்பதாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அறிவித்தார்.

தற்போது அவரின் சகோதரருடைய மருமகளும், பெண்ணிய செயற்பாட்டாளருமான நிடா கான், நேற்று பாஜகவில் இணைந்தது பரபரப்பாக பார்க்கப்படுகிறது. நீடா கான் முத்தலாக்கால் பாதிக்கப்பட்டவராவார். முத்தலாக் என்பது இஸ்லாமியர்கள் சிலரால் பின்பற்றி வந்த உடனடி விவாகரத்து முறையாகும். திருமண பந்தத்தை மூன்று முறை தலாக் கூறி பிரிவதை இஸ்லாமிய ஆண்கள் பின்பற்றி வந்தனர், இது அச்சமூகத்து பெண்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து முத்தலாக் சட்டத்தை மத்திய அரசு அதிரடியாக தடை செய்தது. ஆகஸ்ட் 1, 2019 முதல் முத்தலாக் தண்டனைக்குரிய குற்றமாகும்.

Also read:  மருத்துவரை பழிவாங்க அவரின் 8 வயது மகனை கொலை செய்த கம்பவுண்டர்கள்!!

நீடா கான், உ.பி பாஜக அலுவலகத்தில் முன்னாள் மாநில தலைவர் லக்‌ஷ்மிகாந்த் பாஜ்பாய் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இவர் 7 ஆண்டுகளுக்கு முன் தனக்கு முத்தலாக் கொடுக்கப்பட்டபோது போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வந்த போது தனக்கு நேர்ந்த இன்னல்களை நினைவுகூர்ந்தார்.

பாஜக தனக்கு ஆதரவளித்தது எனவும், பாஜகவின் ஆட்சிக்காலத்தில் காவல்நிலையங்களில் புகார் அளிக்க வரும் பெண்கள் மீதான கண்ணோட்டம் மாறியிருக்கிறது. ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் பெண்களுக்கென பிரத்யேக உதவி மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. பாஜக உண்மையான அர்த்தத்தில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதை உறுதி செய்துள்ளது எனவும் நீடா கான் தெரிவித்தார்.

Also read:  2வது முறையாக இம்ரான் கானை சந்திக்க மறுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்!!

தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை எனவும், நான் கட்சிக்கு வருவதால் மேற்கு உ.பியில் பாஜகவுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதால் பாஜகவில் இணைந்தேன் எனவும் தெரிவித்தார். மேற்கு உ,பியில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் போன்ற கட்சிகள் இஸ்லாமிய வாக்குகளை குறிவைத்து வருகின்றன. அந்த வகையில் நீடா கான், பாஜகவுக்காக பரப்புரையில் ஈடுபடுவது அக்கட்சிக்கு இஸ்லாமிய வாக்குகளை பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com