மாதவிடாய் சமயத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்பை எதிர்த்த காரணம் இதுவே… ஸ்மிருதி இரானி விளக்கம்!

Share

`பணியிடத்தில் பெண்கள் பாகுபாடு மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாக விரும்பாததால் மாதவிடாய் காலத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு என்ற கொள்கையை எதிர்த்தேன்’ என ஸ்மிருதி இரானி கூறியுள்ளார். 

`மாதவிடாய் என்பது ஒரு குறைபாடு அல்ல, இதற்கு பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு என்ற கொள்கை வழங்கப்படக் கூடாது’ என்று ஸ்மிருதி இரானி சமீபத்தில் கூறியிருந்தார். இது பலரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. 

மாதவிடாய்

இந்தநிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள ஸ்மிருதி இரானி, “நாடாளுமன்றத்தில் எனது தனிப்பட்ட அனுபவத்தில் இருந்து பேசினேன். பெண்கள் மேலும் மேலும் துன்புறுத்தப்படுவதை நான் விரும்பவில்லை. 

இந்தப் பிரச்னையில் நான் இன்னும் நிறைய சொல்லி இருக்க முடியும். ஆனால், நான் அப்படிச் செய்யவில்லை. ஏனென்றால் அந்தக் கேள்வியைக் கேட்ட மனிதர், ஒருபோதும் பெண்களுக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க விரும்பவில்லை.

டிசம்பர் 13-ம் தேதி, ராஜ்ய சபாவில் அமைச்சர் மனோஜ் குமார் ஜா சில கேள்விகளை எழுப்பினார்.

மாதவிடாய் சுகாதார கொள்கையை விரைவில் வெளியிட அரசு திட்டமிட்டுள்ளதா.. அப்படியானால், அதன் விவரங்கள் என்ன.. இந்த பாலிசியில் LGBTQIA சமூகத்தினரிடையே மாதவிடாய் சுகாதாரத்தை ஊக்கப்படுத்த மற்றும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் ஏதேனும் உள்ளனவா.. என கேள்வி எழுப்பப்பட்டது. 

LGBTQIA+

LGBTQIA சமூகத்தினரிடையே மாதவிடாய் சுகாதாரம் குறித்த கேள்வி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதோடு கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தோடு கேட்கப்பட்டது.

இரண்டாவது பிரச்னை என்னவென்றால், `பீகாரில் மாதவிடாய் விடுப்பு கொள்கை இருக்கிறது. இது மேலோட்டமான கொள்கையாக இருந்தாலும், தனியார் துறைக்கும் பொருந்தும்’ என மனோஜ் குமார் ஜா கூறினார். பீகாரில் 1992-ல் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்புக் கொள்கை அரசில் இருக்கலாம்; ஆனால் தனியாரில் இல்லை. 

மாதவிடாய் சுழற்சி என்பது பெண்களுக்கு இருக்கும் குறைபாடு அல்ல என்று நான் தெளிவாகச் சொன்னேன். ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சி ஏன் முதலாளிக்குத் தெரிய வேண்டும்? இந்தச் சமயத்தில் விடுப்பை எடுக்க வேண்டாம் என்று நினைக்கும் பெண்ணுக்கும் விடுப்பு வழங்கப்படுகிறது.

Work

பெண்கள் அவமானப்படுத்தப்படுவதற்கும், பாகுபாடு காண்பதற்கும் புதிய அடுக்குகளை உருவாக்குகிறீர்கள். 

மாதவிடாய் சமயத்தில் நீங்கள் கடுமையான வலியை எதிர்கொண்டால், அது ஹார்மோன் ஏற்றத்தாழ்வின் அறிகுறியாக இருக்கலாம். 25 வயதுக்கு மேல் இந்தப் பிரச்னை இருந்தால் உங்களுக்கு மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் தேவை’’ என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

ஸ்மிருதி இரானி கூறியுள்ளது சரியான விளக்கமா?… கமென்டில் சொல்லுங்கள்!

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com