`கர்ப்ப கால வாந்தி’… கரு உண்டாக்கும் ஹார்மோன் காரணமா – ஆய்வு தகவல் சொல்வதென்ன?! |study says Vomiting during pregnancy is due to the hormone that causes the fetus

Share

இந்த ஹார்மோன் அனைத்து மக்களிடமும் குறைந்த அளவில் காணப்படுகிறது. கரு வளரும் போது, அது அதிக அளவு GDF15ஐ உற்பத்தி செய்கிறது. இது தாயின் ரத்த ஓட்டத்திற்குச் சென்று குமட்டலைத் தூண்டுகிறது.

சில பெண்கள் மற்றவர்களைவிட மோசமான மார்னிங் சிக்னஸால் பாதிக்கப்படுவார்கள். சிலருக்கு லேசான பாதிப்புகள் மட்டுமே இருக்கும். ஆனால், ஒரு கர்ப்பத்தில் இந்த நிலையால் பாதிக்கப்பட்டால் அடுத்த கர்ப்பத்தில் இது இருக்காது.  

எப்படியென்றால், உடல் இயல்பைவிடக் குறைவான அளவு ஹீமோகுளோபினை உருவாக்கும் பீட்டா தாலசீமியா போன்ற பாதிப்புடையவர்களுக்கு இயற்கையாகவே GDF15 ஹார்மோனின் அளவு அதிகம் இருக்கும். இவர்கள் கர்ப்பமாகும்போது, குழந்தையின் கரு உருவாக்கும் ஹார்மோனால் பாதிக்கப்பட மாட்டார்கள்.

இருப்பினும், சில பெண்களுக்கு GDF15 ஹார்மோன் குறைவாக இருக்கலாம். அவர்கள் கருத்தரிக்கையில் கரு உண்டாக்கும் ஹார்மோனின் அதிக செறிவினால் பாதிக்கப்படலாம்.   

ஆய்வின் முதன்மை ஆசிரியரும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியருமான ஸ்டீபன் ஓ ராஹிலி கூறுகையில், “கர்ப்பமாக இருக்கும் பெரும்பாலான பெண்கள் ஒரு கட்டத்தில் குமட்டல் மற்றும் வாந்தியை அனுபவிப்பார்கள். இது சில பெண்களுக்கு மிக மோசமாக இருக்கும். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படும் அளவுக்கு மிகவும் நோய்வாய்ப்படுவார்கள்.

இதற்கான காரணம் இப்போது தெரிய வந்திருக்கிறது. வயிற்றில் வளரும் குழந்தை, தாய்க்கு பழக்கமில்லாத அளவில் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இந்த ஹார்மோனுக்கு அந்தப் பெண் எவ்வளவு உணர்திறன் உடையவராக இருக்கிறாரோ, அவ்வளவு நோய்வாய்ப்படுவார். 

விஞ்ஞானிகள் சில பெண்களிடம் ஒரு ஜீன் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். குழந்தை அதே ஜீனை பெற்று இருந்தால், GDF15 மிகக் குறைவாகவே இருக்கும். அதனால் மார்னிங் சிக்னஸ் இருக்காது.

அதுவே தாயின் ஜீனை கரு பெறவில்லை என்றால் GDF15 ஹார்மோனுக்கு அதிக உணர்திறன் கொண்டவராக இருப்பார். இதனால் கடுமையான மார்னிங் சிக்னஸுக்கு உள்ளாக நேரிடும்.

இந்த ஆய்வுக்கான ஆதாரங்கள், மார்னிங் சிக்னஸுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஆய்வின் தொடக்கமாக அமைந்துள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com