அழுத்தங்கள் மூலம் குணமாகும் பிரச்னைகள்…
நடு விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவே உள்ள பகுதியில் அழுத்தம் கொடுத்தால், காது பிரச்னைகள் சரியாகும்.
கால் விரல்களை மட்டும் தரையில் ஊன்றியபடி நடந்தால் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்.
வளையல் அணிந்தால், மணிக்கட்டுப் பகுதியிலிருக்கும் புள்ளிகளில் அழுத்தம் ஏற்பட்டு, கர்ப்பப்பையின் செயல்பாடுகள் தூண்டப்பட்டு, மாதவிடாய்ப் பிரச்னைகள் சீராகும்.
விரல்களை மடக்கும்போது சுண்டு விரலுக்குக் கீழ்ப் பகுதியில் ஏற்படும் மடிப்புப் பகுதியில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் தோள்பட்டை வலி நீங்கும்.
ஒருகாலத்தில் பள்ளிக்கூடங்களில் தோப்புக்கரணம் போடுவதைத் தண்டனையாகக் கொடுப்பார்கள். ஆனால், தோப்புக்கரணம் ஒருவித அழுத்த சிகிச்சை என்பது நம்மில் பலருக்கும் தெரியாத உண்மை. தோப்புக்கரணம் போடுவதால் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்.
அதேபோன்று, தவறு செய்யும் குழந்தைகளின் காதைத் திருகுவது ஒரு தண்டனையாகவே பின்பற்றப்படுகிறது. காதைத் திருகுவதால், ஒட்டுமொத்த உடல் உறுப்புகளின் செயல்பாடுகளும் தூண்டப்படும்.
மோதிர விரல் மற்றும் நடுவிரலுக்கு நடுவே உள்ள பகுதியில் அழுத்தம் கொடுத்தால், கண் பார்வை சீராகும்.
கொலுசு அணிந்தால் கணுக்கால் பகுதியிலுள்ள புள்ளிகள் தூண்டப்பட்டு மாதவிடாய்ப் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். இதுபோல பல பிரச்சனைகளுக்கு அழுத்த சிகிச்சையில் தீர்வு உண்டு!