முட்டை சேர்க்காமல் மயோனைஸ்… வீட்டிலேயே எளிதாக செய்யும் ரெசிபி..!

Share

நம்மில் பெரும்பாலோர் கடையில் ஸ்னாக்ஸ் வாங்கி சாப்பிடுவோம். மேற்கத்திய உணவுகளை சுவைக்கும்போது சாஸ், மற்றும் மயோனைஸ் சாப்பிடுவது வழக்கம். வீட்டில் எதாவது ஸ்நாக்ஸ் செய்யும்போதும் கடைகளில் இருந் ரெடிமேட் மயோனைசை வாங்கி பயன்படுத்துவோம்.

இது நிறைய செயற்கை சுவைகளால் நிரம்பியுள்ளது மற்றும் நீண்ட காலத்திற்கு இதைத் தொடர்ந்து சாப்பிடும்போது அது நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதோடு ஒரு சிலர் முட்டை இல்லாமல் மயோனைஸ் செய்ய முடியுமா என்று யோசிப்பார்கள். அவர்களுக்காகவே எளிதான முட்டை இல்லாத மயோனைஸ் செய்முறையைக் கொண்டு வந்துள்ளோம்.

விளம்பரம்

முட்டையில்லா மயோனைஸ் செய்ய தேவையான பொருட்கள்

  • 1 கப் எண்ணெய்

  • 1/4 கப் குளிர்ந்த பால்

  • 1 1/2 தேக்கரண்டி வினிகர் அல்லது எலுமிச்சை சாறு

  • 1/2 டீஸ்பூன் கடுகு தூள்

  • உப்பு – ருசிக்கேற்ப

  • 2 டீஸ்பூன் தூள் சர்க்கரை

முட்டையில்லா மயோனைஸ் தயாரிப்பதற்கான வழிமுறைகள்

ஒரு வாய் குறுகிய பாத்திரம் அல்லது ஜாடியில் அனைத்து பொருட்களையும் சேர்த்து பிளெண்டர் அல்லது போர்க் கரண்டி கொண்டு கலக்கவும். அனைத்து பொருட்களும் ஒன்றிணையும் வரை தொடர்ந்து இதைச் செய்யவும்.

News18

இது நீண்ட  என்றால் நீங்கள் மிக்சியைக் கூட மெதுவான வேகத்தில் வைத்து பயன்படுத்தலாம். இந்த கலவை கொஞ்சம் கொஞ்சமாக அடர்த்தி ஆகும். நீங்கள் ஒரு கிரீமி அமைப்பைப் பெறுவீர்கள். சுத்தமான கண்ணாடி கிண்ணத்திற்கு மாற்றவும். அவ்வளவு தான் உங்களுக்குத்  தேவையான முட்டையில்லா மயோனைஸ் கிடைத்துவிடும்.

இதையும் பாருங்க : 
இனி சாதாரணமாக இளநீர் குடிக்காமல் இப்படி டிரை பண்ணி பாக்கலாமே..!

இதை வெறுமனே அப்படிஏ பயன்படுத்தலாம். இல்லை என்றால் அதில் சில மாற்றங்கள் செய்து சுவை கூடுதலாக பயன்படுத்தலாம். உங்களுக்கு பிடித்த நறுக்கப்பட்ட காய்கறிகளை மயோனைசேவுடன் சேர்த்து, உப்பு மற்றும் மிளகு சேர்த்து கலக்கி வெஜ் டிப்பாகவும் பயன்படுத்தலாம்.

வெறும் வயிற்றில் தேநீர் அருந்துவதால் ஏற்படும் தீமைகள்.!


வெறும் வயிற்றில் தேநீர் அருந்துவதால் ஏற்படும் தீமைகள்.!

கார்ன் சாப்பிடும் போது, வழக்கமான சோளத்திற்கு  கூடுதலாக  மயோனைஸ், சிறிது தக்காளி கெட்ச்அப், உப்பு, மிளகுத்தூள் மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து சீசன் செய்து சாப்பிட்டு பாருங்க. குழந்தைகளுக்கும் இது மிகவும் பிடிக்கும்.ஸ்வீட் கார்ன் மீது இதையும் தடவி சாப்பிடலாம்.

விளம்பரம்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

  • First Published :

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com