Doctor Vikatan: தேங்காய், புளி சேர்த்த உணவுகளைச் சாப்பிட்டால் நெஞ்சு அடைப்பது ஏன்? |chest congestion after eating food with coconut and tamarind, why?

Share

நீங்கள் குறிப்பிட்டுள்ள குழம்பு வகைகளில் புளி இருக்கும்.  புளி அவசியம்தான். ஆனால் உங்களுக்கு நெஞ்செரிச்சல் பிரச்னை இருக்கும்பட்சத்தில், புளியின் அமிலத்தன்மை காரணமாக, அது நெஞ்சுப்பகுதியை அடைப்பதுபோல உணரச் செய்யலாம். 

அசிடிட்டி

அசிடிட்டி

உணவை மென்று சாப்பிட வேண்டியதன் அவசியம் பலருக்கும் தெரிவதில்லை. உணவை நன்கு வேகவைத்துச் சாப்பிட வேண்டியதும் அவசியம். தொண்டைப்பகுதியில் உணவு அடைப்பது போன்று உணரும்போது சிலர், தண்ணீர் குடித்துக் குடித்து உணவை விழுங்குவார்கள். இது தவறு.

முதலில் உங்களுக்கு அசிடிட்டி பிரச்னை இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். எப்படிப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது இப்படி உணர்கிறார்கள் என்பதைக் குறித்துவைத்துக்கொண்டு, மருத்துவரிடம் செல்லும்போது விளக்கமாகச் சொன்னால், மருத்துவரால் சரியான சிகிச்சையைப் பரிந்துரைக்க முடியும். தேவைப்பட்டால் எண்டாஸ்கோப்பி பரிசோதனை செய்யச் சொல்வார்கள். தேங்காய், புளி சேர்த்த உணவுகளை நிறுத்துவது மட்டும்  தீர்வாகாது. பிரச்னைக்கான காரணம் அறிந்து சிகிச்சை எடுத்தால்தான் அந்த பாதிப்பு மீண்டும் வராமலிருக்கும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com