Doctor Vikatan: வாக்கிங், காய்கறி, பழங்கள் சேர்த்த உணவுப்பழக்கம்; மது பாதிப்பைத் தவிர்க்க உதவுமா? | Doctor Vikatan: Walking, vegetable, fruit diet Can help prevent alcohol harm?

Share

உங்கள் விஷயத்தில் இவையெல்லாம் இருக்கின்றனவா என பரிசோதனை செய்து பார்த்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை. உடல் எடை சரியான அளவில் இருக்கிறதா என்பதும் முக்கியம். சிலருக்கு இப்படிப்பட்ட இணைநோய்கள் இருப்பதே தெரியாமலிருப்பார்கள். வேறு பிரச்னைகளுக்காக மருத்துவப் பரிசோதனைக்குச் செல்லும்போதுதான் இவை இருப்பது தெரியவரும்.

காய்கறி

காய்கறி
விகடன்

மது அருந்துவன் பாதிப்பைத் தவிர்க்க காய்கறிகள், பழங்கள், பருப்புகள் சாப்பிடலாமா என கேட்டிருக்கிறீர்கள்…. மது அருந்துவதே தவறானதுதான். நீங்கள் மதுப் பழக்கத்தை அறவே நிறுத்திவிட்டு அசைவமும் சாப்பிடலாம், பழங்கள், காய்கறிகளும் சாப்பிடலாம். ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றினாலும் நீங்கள் மதுப்பழக்கத்தைக் கைவிடாத வரையில் அந்த உணவுகளால் உங்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com