சீன மண்ணில் மெஸ்ஸி அடித்த ‘அதிவேக கோல்’ – ஆடிப்போன ஆஸ்திரேலியா என்ன செய்தது?

Share

அர்ஜெண்டினா, கால்பந்து, சீனா

பட மூலாதாரம், Getty Images

ஆட்டம் நேற்று இரவு தொடங்கியது. ஆஸ்திரேலிய கால்பந்து வீரர்கள் போட்டியின் தன்மையை உணர எத்தனித்தனர். ஆனால், அதற்குத் துளியும் இடம்கொடுக்காமல், ஆட்டம் தொடங்கிய ஒன்றரை நிமிடத்திலேயே அவர் கோல் அடித்தார்.

அரங்கத்தில் கூடியிருந்த சீன ரசிகர்கள் அத்தனை பேரும் ‘மெஸ்ஸி… மெஸ்ஸி…’ என்று அவரது புகழைப் பாடத் தொடங்கினார்கள். இத்தகைய அதிவேக கோல் தங்கள் வலைக்குள் வந்து விழுமென்று ஆஸ்திரேலிய வீரர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.

பெய்ஜிங்கில் நடைபெற்ற இந்த கால்பந்தாட்ட போட்டியில், வெறும் 90 விநாடிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோல் அடித்தார் லியோனெல் மெஸ்ஸி. இது அங்கு கூடியிருந்த அவரது ஆயிரக்கணக்கான சீன ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

அங்கிருந்த பெரும்பாலான ரசிகர்கள் நீலமும் வெள்ளையும் கலந்த நிறத்திலான அர்ஜெண்டினா ஜெர்சிகளை அணிந்திருந்தனர். அந்த ஜெர்சிகளின் பின்னால் இருந்ததோ ஒரேயொரு பெயர், லியோனெல் மெஸ்ஸி.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com