முதலையை அங்கித் குமார் உறவினர்கள் சேர்ந்து அடித்து கொலைசெய்வது போன்ற வீடியோ சோஷியல் மீடியாவில் பரவியிருக்கிறது. இது குறித்து அங்கித் குமாரின் தாத்தா சகல் தீப், “நாங்கள் புதிய பைக் ஒன்று வாங்கி இருந்தோம். அதனை கங்கை ஆற்றில் நிராட வைத்துவிட்டு, பூஜைக்காக கங்கை புனித நீர் எடுத்துச்செல்ல வந்தோம்.
ஆனால் ஆற்றில் அங்கித்தை முதலை கடித்துக்கொன்றுவிட்டது. எனவே முதலையை வெளியில் இழுத்து அடித்துக்கொன்றோம்” என்று குறிப்பிட்டார். முதலையை அடித்து கொன்றது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.