Doctor Vikatan: எனக்கு எப்போதும் காதுக்குள் அரிப்பு இருக்கிறது. பட்ஸ் வைத்துக் குடைந்தால்தான் சரியாகிறது. காது அரிப்புக்கு என்ன காரணம்… தீர்வு உண்டா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ்.
காதில் அரிப்பு ஏற்படுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள இருக்கக்கூடும். முதல் காரணம் காதில் ஃபங்கஸ் (fungus) எனப்படும் பூஞ்சைத் தொற்று. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதும் இந்தத் தொற்றைத் தீவிரப்படுத்தும். சொட்டு மருந்துகளை அதிகப்படியாக உபயோகம் செய்வதாலும் இந்தத் தொற்று உருவாக வாய்ப்பு உள்ளது.
நீங்களாகவே சுய மருத்துவம் செய்வது ஆபத்தில் முடியலாம். இந்தப் பிரச்னைக்கு, காது-மூக்கு- தொண்டை நோய்களுக்கான சிகிச்சை அளிக்கும் மருத்துவரை அணுகினால் பரிசோதனை செய்து, தேவைப்பட்டால் காதை சுத்தம் செய்து, சொட்டு மருந்து பரிந்துரைப்பார்.