மும்பையில் 165 கிலோ உடல் பருமன் கொண்ட பெண்ணிற்கு இரட்டை குழந்தைகள் -A 165 kg obese woman in Mumbai has twins

Share

டாக்டர் ரேணுகா முதல் கட்டமாக, குழந்தை வளர்ச்சியடையும் முன்பாக பிறந்துவிடக்கூடாது என்பதற்காக கர்ப்பப்பையின் வாசலில் தையல் போட்டார். அதோடு அவருக்குப் பிரசவம் பார்க்க அனைத்து ஏற்பாடுகளையும் டாக்டர் தயார் நிலையில் வைத்திருந்தார். சீத்தல் வயிற்றில் இரட்டை குழந்தைகள் இருந்தன. சீத்தலுக்கு 8வது மாதத்தில் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. அதோடு ரத்த அழுத்தமும் மிக வேகமாக அதிகரித்தது.

உடனே அவருக்குப் பிரசவம் பார்க்க டாக்டர் ரேணுகா முடிவு செய்தார். அந்நேரம் சீத்தல் 165 கிலோ எடை இருந்தார். இதனால் பிரசவமும் மிகவும் சவாலான ஒன்றாக இருந்தது. ஆனாலும் சிசேரியன் மூலம் குழந்தை பிரசவிக்கப்பட்டது.

இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. 2.3 மற்றும் 2.06 கிலோ எடை கொண்டதாக இருந்தன. குழந்தைகள் ஒரு மாதம் அவசர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டு முழு வளர்ச்சியடைந்த பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இது குறித்து லீலாவதி மருத்துவமனை டாக்டர் கிரண் அளித்த பேட்டியில், ’அதிக உடல் பருமன் கொண்ட பெண்கள் கருத்தரிக்கும் வாய்ப்புகள் குறைவு. அப்படியே கருத்தரித்தாலும் கருச்சிதைவுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அல்லது குழந்தை வளர்ச்சியடையும் முன்பாக பிறந்துவிடும்’ என்று தெரிவித்தார்.

இதேபோல, கடந்த ஆண்டு, ஒளரங்காபாத்தை சேர்ந்த 155 கிலோ எடைகொண்ட பெண்ணிற்கு குழந்தை பிறந்துது கவனித்துப் பேசப்பட்டது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com