பால்கூட்டு, பராத்தா, குருமா, மசால்வடை… பப்பாளி ஸ்பெஷல் வீக் எண்டு விருந்து | Papaya Special Week End recipes

Share

தேவையானவை:

பப்பாளிக்காய் – 200 கிராம்

கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி – தலா 100 கிராம்

குடமிளகாய் – ஒன்று

வெங்காயம் – ஒன்று

பூண்டு – 8 பல்

இஞ்சி – சிறு துண்டு (தோல் சீவவும்)

பட்டை – சிறு துண்டு

கிராம்பு – 2

ஏலக்காய் – 2

சோம்பு – அரை டீஸ்பூன்

மிளகு – அரை டீஸ்பூன்

தக்காளி – ஒன்று

தேங்காய்த் துருவல் – 4 டீஸ்பூன்

முந்திரி – 6

எண்ணெய் – 4 டீஸ்பூன்,

பச்சை மிளகாய் – 2

சீரகம் – அரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

பப்பாளிக்காய் வெஜ் குருமா

பப்பாளிக்காய் வெஜ் குருமா

செய்முறை:

தேங்காய்த் துருவல், முந்திரியைச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். பப்பாளிக்காய், கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், உருளைக்கிழங்கைப் பொடியாக நறுக்கி, பச்சைப் பட்டாணியுடன் குக்கரில் போட்டு உப்பு, மஞ்சள்தூள், நீர் சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேகவிடவும். வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு தாளித்து அதில் நறுக்கிய குடமிளகாய், வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு கீறிய பச்சை மிளகாய் போட்டு அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு வதக்கவும். சுருண்டு வந்தவுடன் குக்கரில் வேகவைத்த காய் கலவையைச் சேர்த்து மேலும் அரை டம்ளர் தண்ணீர்விட்டுக் கொதிக்கவிடவும். அதில் முந்திரி – தேங்காய்க் கலவை சேர்த்து, சீரகம் தாளித்து இறக்கவும். சுவையான பப்பாளிக்காய் குருமா தயார். இது ஆல் பர்பஸ் குருமா.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com