ஸ்மார்ட்போன் இருந்தால் போதும், ரத்த அழுத்தத்தை அறியலாம்.. ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?!| Researchers found smartphone attachment to monitor blood pressure

Share

ரத்த அழுத்தத்தை அறிய, ஃப்ளாஷ் மீது இந்த கருவியை (Clip) பொருத்தி, விரல் நுனியை அதன் மீது வைக்க வேண்டும். ஸ்மார்ட்போன் ஆப் எவ்வளவு நேரம், எவ்வளவு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தும். கிளிப்பை அழுத்துகையில், ஸ்மார்ட்போனில் இருந்து ஃப்ளாஷ் லைட் விரல் நுனியின் மீது படும்.

அந்த லைட் பின் அளவுள்ள (pin size hole) துளை கொண்ட சேனல் வழியாக கேமராவில் சிவப்பு வட்ட பிம்பமாகக் காட்டும். கிளிப்பை அதிக அழுத்தத்துடன் தொடர்ச்சியாக அழுத்தும்போது பெரிய அளவிலான சிவப்பு வட்டம் கேமராவில் தோன்றும்.

ஸ்மார்ட்போன் ஆப் சிவப்பு வட்டத்தில் உள்ள இரண்டு முக்கிய தகவல்களை எடுத்துக் கொள்கிறது. சிவப்பு வட்டத்தின் அளவை பொறுத்து அழுத்தமும், அதன் பிரகாசத்தை (Brightness) பொறுத்து, விரல் நுனியில் உள்ளேயும் வெளியேயும் செல்லும் ரத்தத்தின் அளவையும் அளவிடுகிறது. அதன் பின் சிஸ்டோலிக், டயஸ்டோலிக் ரத்த அழுத்த அளவை வெளியிடுகிறது. 

“வயதானவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இந்தக் கருவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறைந்த விலை என்பதால் இந்த கிளிப்களை தேவைப்படும் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்க முடியும்” என பல்கலைக்கழக பேராசிரியரும், மூத்த ஆராய்ச்சியாளருமான் எட்வர்ட் வாங் தெரிவித்துள்ளார்.     

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com