குஜராத் மாநிலம், சூரத்தின் கடோதரா பகுதியைச் சேர்ந்தவர் ராமானுஜர். இவர் தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த 18-ம் தேதி இரவு இவரின் மகளும், மனைவியும் மாடியில் தூங்க விரும்புவதாகத் தெரிவித்திருக்கின்றனர். அதற்கு, ‘முடியாது, வீட்டின் அறையில்தான் தூங்க வேண்டும்’ என அனுமதி மறுத்திருக்கிறார். இந்த விவகாரத்தால் மூன்று பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த ராமானுஜர், வீட்டின் சமயலறையிலிருந்த கத்தியை எடுத்துவந்து மகளைக் குத்தியிருக்கிறார்.
இதை எதிர்பார்க்காத மற்ற குடும்பத்தினர் அதைத் தடுக்க முயன்றனர். அவர்களையும் கத்தியால் தாக்கியிருக்கிறார். இதில் அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் கத்திக்காயம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், மகளையும், மனைவியையும் கடுமையாகத் தாக்கியிருக்கிறார். மகளை மட்டும் ஏறத்தாழ 25 முறை கத்தியால் குத்திக் கொலைசெய்திருக்கிறார். இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கின்றன.