40 சூயிங்கம் விழுங்கிய 5 வயது சிறுவன்… பதறிய பெற்றோர்; எச்சரிக்கும் மருத்துவர்கள்! |5 year old boy swallows 40 chewing gum

Share

சூயிங்கம், ஏழு ஆண்டுகளாக உடலில் சிக்கியிருக்கும் என முன்பெல்லாம் எச்சரிக்கப்பட்டு வந்த நிலையில், இதனை மருத்துவர்கள் மறுத்துள்ளனர். அரிதான நிகழ்வுகளில் மட்டுமே இப்படி நிகழும் என விளக்கமளித்துள்ளனர்.

இது குறித்து உணவியல் நிபுணர் பெத் செர்வோனி கூறுகையில், “நீங்கள் ஒரு சூயிங்கத்தை விழுங்கியிருந்தால், அது 40 மணி நேரம் கழித்து உங்கள் மலம் வழியே வெளியேறும். ஏனெனில் அதனைச் செரிக்க முடியாததால், அது முழுவதுமாக வெளியேறுகிறது. 

ஆனால், சிறிதளவு சூயிங்கத்தை அவ்வப்போது விழுங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கக் கூடாது. இதனை ஜீரணிக்க முடியாததால் குடலில் பிரச்னை ஏற்படும். இதைத் தினமும் அல்லது பல முறை செய்தால், குடல் அடைப்பு ஏற்படலாம். அதன் பிறகு நீங்கள் சாப்பிடும் எதையும் வெளியேற்ற முடியாது. இது வலி மற்றும் அழுத்தத்திற்கு வழிவகுக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் குழந்தைகளுக்கு சூயிங்கம் வாங்கிக்கொடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்!

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com