Doctor Vikatan: ஒரு மாத்திரை எத்தனை மணி நேரம் உடலுக்குள் வேலை செய்யும்? | Doctor Vikatan: How many hours does a pill work inside the body?

Share

Doctor Vikatan: ஒரு மாத்திரை சாப்பிட்டால் அது எத்தனை மணி நேரம் உடலுக்குள் வேலை செய்யும்.?

-கிடையூர் மாணிக்கம், பால்வாய் தெரு, சங்ககிரி, விகடன் இணையத்திலிருந்து…

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொதுமருத்துவர் பாபு நாராயணன்

பொது மருத்துவர் பாபு நாராயணன் | சென்னை

பொது மருத்துவர் பாபு நாராயணன் | சென்னை

எந்தவிதமான மாத்திரையை எடுத்துக் கொண்டாலும் அது நான்குவிதமான புராசெஸுக்கு உள்ளாகும். முதலில் மருந்து உட்கிரகிக்கப்படுதல். உதாரணத்துக்கு இன்ஜெக்‌ஷன் போட்டால் மருந்தானது, நம் தசைகளில் இருந்தோ, சப்கியுட்டேனியஸ் லேயர் எனப்படும் சருமத்தின் அடுக்கு வழியோ உடலுக்குள் உறிஞ்சப்படும்.

அடுத்தது, அந்த மருந்து உடல் பாகங்களுக்கு அனுப்பப்படுவது. கொழுப்பு, தசை, ரத்தம், கல்லீரல் உள்பட உடலின் எல்லா பாகங்களிலும் அந்த மருந்து விநியோகிக்கப்படும்.

மூன்றாவது, மெட்டபாலிசம் எனப்படும் வளர்சிதை மாற்றம்…. அதாவது, அந்த மருந்து உடலில் எப்படி உடைபடுகிறது என்பது. கடைசியாக, வெளியேற்றம். அதாவது, அந்த மருந்து எப்படி நம் உடலில் இருந்து வெளியே போகிறது என்பது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com