பிரசித் கிருஷ்ணா கர்நாடகாவைச் சேர்ந்தவர், முழு பெயர் முரளி கிருஷ்ணா பிரசித் கிருஷ்ணா. ரஞ்சி டிராபியில் 11 போட்டிகளில் 49 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். லிஸ்ட் ஏ ஒருநாள் போட்டிகளில் 57-ல் ஆடி 102 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் ஒரு முறை 6/33 என்று அசத்தியுள்ளார்.
இவர் இப்போது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அசத்தி வருகிறார். பாட் கமின்ஸ் போல் பந்தை குட்லெந்துக்கு சற்றே முன்னே குத்தி பந்தை எழும்பச் செய்து பேட்ஸ்மென்களை எம்பிக் குதிக்க வைத்துக் கொண்டிருக்கிறார், அவுட்ஸ்விங்கர், இன்ஸ்விங்கர், யார்க்கர், ஸ்லோ ஒன் என்று அசத்தி வருகிறார்.
ஐபிஎல் தொடரில் 2 மெய்டன்களை வீசிய வீரராகத் திகழ்கிறார். அடுத்த இங்கிலாந்து பயணத்தின்போது ஷமி, பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இணைந்து வீசுவதை நிச்சயம் பார்க்கத்தான்போகிறோம். நல்ல பாடி லாங்குவேஜ், ஆக்ரோஷத்துடன் கூடிய விவேகம் மற்றும் எளிமை ஆகியவை பிரசித் கிருஷ்ணாவின் சிறப்பம்சம். நேற்று இந்திய முன்னாள் கேப்டன் முன்னாள் கிங் கோலியையே ஷார்ட் பிட்ச் பந்தில் வீழ்த்தினார், கோலி இவரது வேகத்தை எதிர்கொள்ள முடியாமல் கேட்ச் ஆகி வெளியேறினார்.
இந்த ஐபிஎல் தொடரில் மெய்டன் வீசியவர்கள்:
பெங்களூர் அணியை சேர்ந்த ஹர்சல் படேல் உள்ளார். 9 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர் டெத் ஓவரில் 2 மெய்டன் வீசி உள்ளார். அடுத்ததாக ராஜஸ்தான் அணியை சேர்ந்த பிரதிஷ் கிருஷ்ணா 8 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை கைப்பற்றிய இவர் 2 மெய்டன் ஓவர்களை வீசி உள்ளார்.
3-வது இடத்தில் லக்னோ அணியை சேர்ந்த கிருஷ்ணப்பா கெளதம் உள்ளார். 2 போட்டிகளில் விளையாடிய இவர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். டெல்லி அணிக்கு எதிராக 2 மெய்டன் ஓவர்களை வீசி உள்ளார்.
-வது இடத்தில் பெங்களூர் அணியை சேர்ந்த ஹசில்வுட் உள்ளார். 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய இவர் 1 மெய்டன் ஓவர்களை வீசி உள்ளார். கடைசி இடத்தில் உமேஷ் யாதவ் உள்ளார். இவர் 1 மெய்டன் ஓவர் உள்பட 11 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.