புளிக்காத கெட்டி தயிரில் சிறிது உப்பு சேர்த்து தேங்காய் துருவல் பச்சை மிளகாய் மல்லித்தழை சீரகத்தை மிக்ஸியில் விழுதாக அரைத்து கலந்து அந்த தயிரில் வார்த்த இட்லிகளை ஊறவைத்து” தஹி இட்லியாக..”.
காலையில் செய்து ஆறிய இட்லி அதிகமாக இருந்தால் அதை மெல்லிய ஸ்லைஸ் காக கட் செய்து பஜ்ஜி மாவில் தோய்த்து வாணலியில் எண்ணையில் போட்டு மொறுமொறுவென பொரித்து ‘இட்லி பஜ்ஜியாக’… இட்லியை நீளவாக்கில் கட் செய்து தோசை மிளகாய்த்தூள், துருவிய நட்ஸ் தூவி ,’இட்லி பிங்கர் சிப்ஸாக’…
இப்படி இட்லியை விதவிதமாக தயாரித்து மல்லி சட்னி, புதினா சட்னி, தக்காளி சட்னி ,வேர்க்கடலை சட்னி, கேரட் சட்னி இப்படி விதவித சட்னிகளுடன்… சூடாக கொடுக்க வியாபாரம் சூடு பிடித்தது. சின்னதாக உணவகம் ஆரம்பித்தேன்.
கொரோனா நேரத்தில் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு என்னுடைய லாபத்தை குறைத்துகொண்டு இலவசமாக இட்லி தயாரித்துக் கொடுத்தேன். .என்னிடம் இப்போது ஆதரவற்ற பத்து பெண்கள் வேலை செய்கிறார்கள்.என்னுடைய சேவையை பாராட்டி அரசாங்கம் எனக்கு விருது கொடுத்தது. அதை ஒட்டியே அந்த பண்பலை நிகழ்ச்சி.
இது அனைத்துக்கும் நீங்கள் தான் சார் காரணம்
நான் மனம் கலங்கிய நிலையில் தவறான ஒரு முடிவெடுக்கும் தருணத்தில் இருந்த சமயம்..
என்னை ஆறுதல் படுத்தி ,’உன்னால் முடியும்’ என்று நீங்கள் சொன்ன அந்த ஒத்த வார்த்தை.. இன்னமும் மனதிற்குள் அப்படியே ஒலித்துக் கொண்டிருக்கிறது.
‘என் மனதை அழகுபடுத்திக் கொண்டேன் சார்’ என்றான்.
என்னுடைய எல்லாப் புகழும் தங்கதுரை சார் உங்களுக்கே !என்று அவன் சொல்லி முடிக்க விழிகளில் ஆனந்த கண்ணீர்.
நீதி… அனைவரும் அரசாங்க உத்தியோகம் தான்/ தகவல் தொழில்நுட்ப வேலைதான் என்று இல்லாமல் சொந்தமாக அவரவர்களுக்கு தெரிந்த தொழிலை தொடங்க ..”நம்மாலும் முடியும் ‘
நாமும் வாழ்க்கையில் கதிரவனைப் போல் சாதிக்கலாம். நான் சொல்வது சரிதானே நட்பூக்களே!
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.