வெந்நீரில் தலைக்குக் குளிக்க வேண்டாம். அது கூந்தல் வறட்சியை அதிகப்படுத்தும். மண்டைப்பகுதி வறட்சி அதிகரிக்கும்போது, அது பொடுகுத் தொல்லையை மேலும் தீவிரப்படுத்தும்.
அந்தக் காலத்தில் வலியுறுத்தபபட்ட எண்ணெய்க் குளியலை அலட்சியமாகக் கருத வேண்டாம். எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊறிய பிறகு குளிப்பது மண்டைப் பகுதியையும் முடியையும் வறட்சியின்றி வைப்பதுடன், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.
வெயிலில் டூ வீலர் ஓட்டுகிறீர்கள் என்றால் தலையை சுத்தமான காட்டன் துணியால் கட்டிக் கொண்டு, அதற்கு மேல் ஹெல்மெட் உபயோகியுங்கள். இதன் மூலம் வியர்வை உறிஞ்சப்படும். அழுக்கும் மாசும் சேர்ந்து, பொடுகு உருவாவது தடுக்கப்படும். இப்படி தலைக்கு உபயோகிக்கும் துணியை ஒவ்வொரு நாளும் மாற்றிவிட வேண்டும். கூந்தலை எந்த அளவுக்கு சுத்தமாகப் பராமரிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு கூந்தல் தொடர்பான பிரச்னைகளில் இருந்து விலகி இருக்கலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.