IPL 2023 | 'இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வேண்டாமே' – பிராவோ கலகல பேச்சு

Share

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது குவாலிபையர் போட்டியில் விளையாடுகிறது. இந்நிலையில், இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வேண்டாம் என வேடிக்கையாக தெரிவித்துள்ளார் சென்னை அணியின் பவுலிங் பயிற்சியாளர் பிராவோ. பேட்டி ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் 4 முறையும், மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறையும் ஐபிஎல் கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. இரு அணிகளும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் முறையே 2010, 2013, 2015, 2019 சீசன்களில் விளையாடி உள்ளன. அதில் சென்னை ஒரு முறையும், மும்பை மூன்று முறையும் வாகை சூடியுள்ளது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com