Doctor Vikatan: திடீரென ஏற்பட்ட பால் அலர்ஜி… இனி வாழ்நாள் முழுவதும் பாலே குடிக்க முடியாதா? | Doctor Vikatan: Sudden milk allergy… what is the reason

Share

Doctor Vikatan: என் வயது 40. நீண்ட நாள்களாக வயிறு தொடர்பான பிரச்னை இருக்கிறது. இப்போது பால் அல்ரஜியாக இருக்கலாம் என பாலை தவிர்க்கச் சொல்கிறார் டயட்டீஷியன். இப்படி திடீரென லாக்டோஸ் இன்டாலரன்ஸ் வருமா? இனி நான் பாலே குடிக்கக்கூடாதா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் புவனேஸ்வரி

ஊட்டச்சத்து ஆலோசகர் புவனேஸ்வரி | சென்னை

ஊட்டச்சத்து ஆலோசகர் புவனேஸ்வரி | சென்னை

நீண்ட நாள்களாகவே வயிறு தொடர்பான பிரச்னை இருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள். அதற்கு மருத்துவப் பரிசோதனையோ, சிகிச்சையோ எடுத்தீர்களா என்று தெரியவில்லை. திடீரென உங்களுக்கு ஏற்பட்டிருப்பதாகச் சொல்லும் லாக்டோஸ் இன்டாலரன்ஸ், உங்களுக்கு இருக்கும் ஏதேனும் நோயின் காரணமாக வந்திருக்கலாம்.

உங்களைப் பரிசோதித்த மருத்துவரோ, டயட்டீஷியனோ பாலைத் தவிர்க்கச் சொல்லியிருந்தால், அதைப் பின்பற்றுவதுதான் சரியானது. சில நாள்கள் கழித்து மீண்டும் பால் சேர்த்துக் கொள்ளச் சொல்லலாம். அப்போதும் நேரடியாக பாலாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com