Doctor Vikatan – 01 January 2014 – இளமை சருமத்துக்கு இளநீர்! | Vijayalakshmi, Beauty tips, Coconut, uma sakthi

Share

‘நீங்க எப்படிப்பட்ட கேரக்டர்?’

‘கொஞ்சம் கூச்ச சுபாவம் உண்டு. அதுவும் பழகும் வரைக்கும்தான். அப்புறம் வாயாடின்னு சொல்ற அளவுக்கு சகஜமாப் பழகிடுவேன். என்னைப் பொருத்தவரைக்கும், ஃபேமிலியோட இருக்கிறது, காரில் லாங் டிரைவ் போறது, பிடிச்ச மியூசிக் கேட்கிறது, ஃப்ரெண்ட்ஸோட நேரத்தைச் செலவிடுறது, நல்ல சாப்பாடு சாப்பிடுறது, நல்ல சினிமா பார்க்கிறது, பார்க், பீச் போறது, மழையை ரசிக்கிறதுனு சின்னச் சின்ன விஷயங்கள்கூட என்னை சந்தோஷப்படுத்தும். ‘

‘உங்களுக்குப் பிடிச்ச பொழுதுபோக்கு?’

‘குழந்தைகளோட விளையாடுறது. இசையை ரசிக்கிறது, நேரம் கிடைக்கும்போது குட்டித் தூக்கம் போடுறதுனு இந்த லிஸ்ட் ரொம்பப் பெரிசுங்க. நான் சொல்ல ரெடி. தொடராப் போடுவீங்களா..?” என்று குறும்பாகக் கேட்கிறார் விஜயலட்சுமி.

– உமா ஷக்தி

படங்கள்: ஆ.முத்துக்குமார்

டிப்ஸ்… டிப்ஸ்!

பீட்ரூட், கேரட், நெல்லிக்காய் தலா ஒன்றை அரைத்துச் சாறாக்கி, பாதி எலுமிச்சைப் பழச்சாறு கலந்து, தினமும் காலையில் குடித்து வந்தால், ஆற்றலும் புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

இளநீர், ஃப்ரெஷ் ஜூஸ், க்ரீன் டீ-னு அதிக நீர்ச் சத்து உடம்பில் சேர்ந்தால், நம் சருமம் எப்பவும் இளமையோடு இருக்கும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com