தமிழ்நாடு அரசியல்: ஓபிஎஸ், டிடிவி தினகரன் சசிகலா இணைவது எடப்பாடி பழனிசாமிக்கு சவால் ஆகுமா?

Share

அதிமுக டிடிவி ஓபிஎஸ்

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனும் சந்தித்துப் பேசியிருப்பது தமிழகம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தொடர்புடைய அரசியலில் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.

இன்று மாலை 7 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களை சேர்ந்து சந்தித்த இருவரும் தாங்கள் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளதாக அறிவித்தனர்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டில் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது அவருடன் அவரது தரப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரனும் உடனிருந்தார்.

ஓபிஎஸ் வந்தபோது அவரை வாசல் வரை வந்து வரவேற்ற டிடிவி தினகரனுடனான இந்தச் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இருவரும் தாங்கள் இணைந்து செயல்படப்போவதாக அறிவித்தனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com