மணிப்பூரில் வன்முறையால் தொடரும் பலி எண்ணிக்கை – தொடரும் 144 தடை உத்தரவு

Share

காணொளிக் குறிப்பு,

மணிப்பூரில் வன்முறையால் தொடரும் பலி எண்ணிக்கை – தொடரும் 144 தடை உத்தரவு

மணிப்பூரில் வன்முறையால் தொடரும் பலி எண்ணிக்கை – தொடரும் 144 தடை உத்தரவு

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நடந்த இன மோதல்களில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வார தொடக்கத்தில் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மெய்தேயி சமூகத்திற்கு பழங்குடி அந்தஸ்து வழங்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக பழங்குடி சமூகங்கள் நடத்திய பேரணிக்குப் பிறகு வன்முறை தொடங்கியது.

வீடுகள், வாகனங்கள், தேவாலயங்கள் மற்றும் கோவில்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. சில அறிக்கைகள் இறந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளதாகவும், சுமார் 10,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் கூறுகின்றன.

சட்டம் ஒழுங்கை பராமரிக்க ராணுவத்தினரும், காவலர்களும் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர்.பல மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது, இணைய சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்கள், மணிப்பூரில் இருந்து தங்கள் மாணவர்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com