“இன்று மழை வர வாய்ப்பிருப்பதால் இரண்டாவதாக பேட்டிங் செய்கிறோம். மும்பை இந்தியன்ஸ் அணி முதல் பேட்டிங் ஆடுவதையே விரும்புகிறோம். இதுவரை சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறோம். அனைத்து வீரர்களுமே முக்கிய பங்களிப்பை அவ்வப்போது அளித்து வருகின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் சில முன்னேற்றங்கள் இருந்திருக்கின்றன. கடந்த போட்டிகளில் சின்ன சின்ன சொதப்பல் இருந்திருக்கின்றன. இப்போது இரண்டாவது பாதியில் இருக்கிறோம். இன்னும் சிறப்பாக விளையாடி போட்டிகளை வீரர்கள் முடித்துவைக்கவேண்டும்” என்ற தோனி, இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டார்.