Doctor Vikatan: சதைப்பிடிப்பில்லாத உடல்வாகு, அடிக்கடி மயக்கம்… டீன் ஏஜ் மகனுக்கு சிகிச்சை அவசியமா? | Doctor Vikatan: lean Body, fainting…need treatment for teenage son?

Share

Doctor Vikatan: என் 17 வயது மகன் உடல் மெலிந்து, சதைப்பிடிப்பின்றி எலும்புகள் தெரியும்படி இருக்கிறான். அதேநேரம் அவனது உடலிலோ, படிப்பிலோ எந்தப் பிரச்னையும் இல்லை. ஆக்டிவ்வாகவும் தெம்புடனும் ஓடியாடுகிறான். எனினும், காலை வெயில், காற்றோட்டமில்லாத கூட்ட நெரிசல் போன்ற தருணங்களில் மயக்கமடைந்திருக்கிறான். இது கவலைப்படக்கூடியதா… சிகிச்சை தேவையா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்

பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்

பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்

உங்களுடைய மகன் எப்போதுமே ஒல்லியான உடல்வாகுடன்தான் இருப்பார், ஆனாலும் படிப்பிலோ, விளையாட்டிலோ எந்தப் பிரச்னையும் இல்லை, ஆக்டிவ்வாகவே இருக்கிறார் என்றால் பயப்படத் தேவையே இல்லை. அப்படி இருப்பது நார்மல்தான்.

ஏனெனில் வளரும் பருவத்தில் பிள்ளைகள் ஓடியாடி விளையாடுவதால், எனர்ஜி செலவாவதால் உடல் பருமன் குறைவாக இருக்கலாம். தவிர அது வளர்ச்சியின் ஒரு பகுதிதான் என்பதால் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com