ஆப்பிள் CEO-வை கவர்ந்த வடா பாவ்.! வீட்டிலேயே செய்வதற்கான சிம்பிள் ரெசிபி..

Share

சமீபத்தில் இந்தியா வந்திருந்த ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக், மும்பையில் நடிகை மாதுரி தீட்சித்துடன் சேர்ந்து சில உள்ளூர் உணவு வகைகளை ருசித்து மகிழ்ந்தார். நடிகை மாதுரி மற்றும் டிம்குக் இருவரும் Swati Street என்ற கடைக்கு சென்றனர்.

Tim Cook இங்கு தான் முதன் முதலில் வடா பாவ்-ஐ ருசித்து மகிழ்ந்துள்ளார். நடிகை மாதுரி தான் டிம் குக்-உடன் Vada Pav சாப்பிட்டு ருசித்தது குறித்து ஃபோட்டோவுடன் ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார். இதனை ரீட்விட் செய்துள்ள Tim Cook, “எனது முதல் வடா பாவை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி மாதுரி தீட்சித் – இது மிக சுவையாக இருந்தது” என்று குறிப்பிட்டார்.

வெளிநாட்டில் இருந்து வந்த Tim Cook பிரமாதம் என கூறியுள்ள வடா பாவ்-ஐ ருசிக்க வேண்டும் என உங்களுக்கு ஆசையாக இருக்கிறதா.! கவலை வேண்டாம்.. இதை வீட்டில் செய்வது மிகவும் எளிது. இந்த சுவையான எளிய ஸ்நாக்ஸ் செய்ய ஒரு மிருதுவான உருளைக்கிழங்கு வடா-வை ஒரு மென்மையான பாவ் பன்னுக்கு இடையில் சாண்ட்விச் செய்யப்பட்டு, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சட்னிகளுடன் பரிமாறப்படுகிறது.

ஸ்ட்ரீட் ஸ்டைல் வடா பாவ்-ஐ வீட்டிலேயே செய்வதற்கான ரெசிபி:

வடா செய்ய தேவையான பொருட்கள்:

  • 3 பெரிய உருளைக்கிழங்கு (வேகவைத்து மற்றும் பிசைந்து எடுத்து கொள்ளுங்கள்)
  • அரை கப் கடலை மாவு
  • 1 டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் சீரக தூள்
  • சுவைக்கேற்ப உப்பு
  • தேவையான அளவு எண்ணெய்

பாவ்-க்கு தேவையானவை:

  • 6 பாவ் பன்கள்
  • 2-3 டீஸ்பூன் பட்டர்

சட்னிக்கு தேவையான பொருட்கள்:

  • அரை கப் துருவிய தேங்காய்
  • அரை கப் கொத்தமல்லி
  • 3-4 பச்சை மிளகாய்
  • தேவையான அளவு உப்பு

Discover the Deliciousness of Mumbai style Vada Pav! - Masalabox

வடா பாவ் செய்முறை:

Vada Pav செய்வதற்கு முதலில் Vada-வை தயார் செய்து கொள்ளலாம். இதனை செய்ய மசித்து எடுத்து கொண்டுள்ள உருளைக்கிழங்கு, கடலைமாவு, சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரக தூள் மற்றும் உப்பு உள்ளிட்டவற்றை ஒரு பவுலில் கொட்டி நன்கு மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். இவற்றை நன்கு மிக்ஸ் செய்து கொண்டு நன்கு சாஃப்டான மாவாக உருவாக்கி கொள்ளவும்.

இப்போது இந்த மாவை சிறிய உருண்டைகளை உருவாக்கி, சிறு உருண்டைகளை தட்டையான வடிவத்தில் உருவாக்கி கொள்ளவும்.

இப்போது வாணலி ஒன்றை எடுத்து தேவையான அளவு எண்ணெயை ஊற்றி சூடாக்கி தயார் செய்து வைத்திருக்கும் வடா மிக்சிங்கை பொரித்து எடுக்க வேண்டும். வடா பொன்னிறமாக மற்றும் மிருதுவாக மாறும் வரை ஃப்ரை செய்யவும். பின் அவற்றை டிஷ்யூ பேப்பரால் மூடப்பட்ட ஒரு பிளேட்டில் வைக்கவும்.

சட்னிக்கு தேங்காய், கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்து மென்மையாக பேஸ்ட் போல உருவாக்கி கொள்ளவும்.

பாவ் பன்களை பாதியாக வெட்டி சிறிது பிரவுனாக மாறும் வரை ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து டோஸ்ட் செய்து கொள்ளவும்.

இப்போது வடா பாவ்-ஐ ரெடி செய்ய பாவ் பன்களின் உட்புறத்தில் சிறிது சட்னியை ஸ்பிரட் செய்து கொள்ளவும். வடா-வை இப்போது சட்னியின் மேல் வைத்து லேசாக அழுத்தவும். பின் கூடுதல் சட்னி மற்றும் வறுத்த பச்சை மிளகாய் சேர்த்து சூடாக பரிமாறவும்.

First published:

Tags: Evening Snacks, Food recipes, Snacks

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com