How to: சிறுநீரகக் கல் ஏற்படாமல் தடுப்பது எப்படி? I How To Prevent Kidney Stones?

Share

கடினமான உடற்பயிற்சி மேற்கொள்கையில் உடலில் இருந்து வெளியேறும் சில வகையான ரசாயனங்கள்கூட சிறுநீரகத்தை பாதிக்கும். ஜிம்முக்குச் செல்லும் இளைஞர்கள் சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகள் சார்ந்து மருத்துவமனைக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள். சிறுநீரகக் கல் ஏற்படுவதற்கு இது போன்று நிறைய காரணங்கள் இருக்கின்றன. என்ன காரணத்தால் கல் ஏற்பட்டது எனக் கண்டறிந்தால் அது எவ்வகையான கல் என்பதையும் கண்டறிய முடியும்.

தண்ணீர் தண்ணீர்…

எப்போதெல்லாம் சிறுநீர் கழிக்கிறார்களோ அப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் சிறுநீர் பாதையில் உப்புப் படியாது என்பதால் சிறுநீரகக் கல் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவு. கோடைக்காலத்தில் வழக்கத்துக்கும் அதிகமாக நீர் அருந்த வேண்டும். ஏனென்றால், அதிகமாக வியர்வை வெளியேறுகையில் உடலில் நீர்ச்சத்து குன்றிவிடும். இதனால் சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படும் என்பதால் உடலை எப்போதும் நீர்ச்சத்துடனயே வைத்துக்கொள்வது அவசியம்.

சிறுநீரகத்தில் கல் ஏற்பட்டுவிட்டால் அது எந்த விதமான கல் மற்றும் அதன் அளவைப் பொறுத்து சிகிச்சை வழங்கப்படும். 6 மில்லி மீட்டருக்குள் இருக்கும் கற்களைத் தாங்கலாம். அதற்கும் பெரிதாக உள்ள கற்கள் சிறுநீர்ப் பாதையை அடைத்துவிடும். அப்படிப்பட்ட பெரிய கற்களுக்குதான் அறுவைசிகிச்சை தேவைப்படும்.

இன்றைக்கு சிறுநீர் வெளியேறும் துளையின் வழியே மெல்லிய ஒயரைச் செலுத்தி கல்லை வெளியே கொண்டு வருகிற அளவுக்கு மருத்துவத் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. லேசர் சிகிச்சை மூலம் கல்லை பொடியாக்கி சிறுநீர் வழியாக வெளியேற்றவும் முடியும். சில வகையான கற்களை மட்டும்தான் அதன் தன்மை தெரிந்தால் மாத்திரை மூலமாகவே கரைக்க முடியும்” என்கிறார் கணேஷ்.

– கி.ச.திலீபன்

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com